Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 27

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 27


🔸️ ஜெபமின்றி கிறிஸ்தவ ஜீவியம் இல்லை! 🔸️


"எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்" (லூக். 18:1) என்றே இயேசு நமக்கு சொல்லியிருக்கிறார். நம் அன்றாட ஜீவியத்தில் ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் தேவனுக்குத் தெரியப்படுத்தி அவரோடு உறவாடி சம்பாஷிக்க நாம் கற்றுக் கொள்ளுவது மிக மிக நல்ல பழக்கமாகும்! இந்த அனுபவம் நம்முடைய தினசரி பழக்கத்திற்கு வந்துவிட்டால், நாம் அந்நாள் முழுவதும் ஒரு ஜெப ஆவியால் நிறைந்தவர்களாய் இருப்போம்! இவ்விதமாய் நாம் தேவனோடு பேசி உறவாடும் நேரம் ஒரு மகிழ்ச்சியின் நேரமாகவே நமக்கு மாறிவிடும். நமக்கு ஜெபம் ஒருக்காலும் சடங்காச்சாரமாக இருக்கவே இருக்காது. மேலும் நாம் ஆச்சரியப்படத்தக்க வகையில் தேவன் நம்முடைய இருதயத்தில் நம்மோடு பேசுவதையும் அந்த ஜெப வேளையில் கண்டுகொள்ளுவோம்!!


அதே சமயம், நாம் ஜெப ஜீவியத்தில் வளர்ச்சி அடையும்போது, ஜெபம் நமக்கு ஓரு கடினப் பணியாக இருப்பதையும் காண்போம்! அதாவது, தேவன் நம் இருதயத்தில் வழங்கும் சிறுசிறு பாரங்களுக்காக உண்மை உள்ளவர்களாயிருந்து ஜெபித்தால், இந்த தேவன் நமக்கு அதிக அதிகமான பாரங்களை நம் இருதயத்தில் தருவதையும் காணமுடியும்! இவ்விதமாய் பிறரை தேவன் ஆசீர்வதிக்கும் பணியில் நாமும் அவரோடு இணைந்து "தேவனுக்கு உடன் வேலையாட்களாய்" (Co-workers with God) மாறிவிடுகிறோம்!! 


இயேசு 'பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்' ஜெபித்திருக்கிறார் (எபி.5:7). ஒருசமயம் அவர் கெத்செமனேயில் ஜெபித்தபொழுது, அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. (லூக்கா 22:44). ஆம், அவர் அவ்வளவாய் ஜெபத்தில் தீவிரம் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் ஓர் இரா முழுவதும் ஜெபத்தில் தரித்திருந்தார் (லூக்கா 6:12). மேலும் அவர் அடிக்கடி தனியே வனாந்தரத்திற்கு சென்று ஜெபிக்கும் பழக்கத்தை உடையவராகவும் இருந்தார்! (லூக்கா 5:16).


ஜெபம் எவ்வளவு முக்கியமானது என்பதை இயேசுவின் முன்மாதிரி நமக்குத் தெளிவாகக் காண்பிக்கிறது. அவரே இவ்வளவு அதிகம் ஜெபிக்க வேண்டியிருந்தால், நீங்களும் நானும் எவ்வளவு அதிகம் ஜெபிக்க வேண்டும்! ஆகவே, சோம்பலுக்கு எதிராக கடும் யுத்தம் செய்து "என்ன விலைக்கிரயம் ஆனாலும்" ஒரு ஜெபிக்கும் மனிதனாக அல்லது மனுஷியாக நீங்கள் மாறிவிடுவதற்கு தீர்மானமாய் உறுதி பூண்டுவிடுங்கள்!! 


ஜெபம்:

பரம தந்தையே! ஜெபத்தின் வழியை எங்களுக்கு மாதிரியாக காண்பித்த எங்கள் ஆண்டவர் இயேசுவுக்கே ஸ்தோத்திரம்! அவரைப் போலவே நாங்களும் ஜெபித்திட அருள்புரியும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments