இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 29
🔸️ சிலுவையின் வழியில் அன்பின் ஐக்கியம் வேண்டும்! 🔸️
"நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்" (யோவான் 13:35) என இயேசு கூறினார்.
இவ்வாறு தேவனுடைய வார்த்தை எங்கு வல்லமையாய் பேசப்படுகிறதோ, எங்கு தேவனுடைய அன்பு ஆளுகை செய்கிறதோ, எங்கு தேவனுடைய பிரசன்னம் நெருக்கமாய் உணரப்படுகிறதோ, அப்படிப்பட்ட ஒரு ஸ்தல சபையில்தான் நீங்கள் அங்கம் வகிக்க வேண்டும்!
நாம் பிறரோடு அன்பான ஐக்கியம் கொண்டு சேர்ந்து வாழ பிரயாசப்படும்பொழுதுதான் "நான் எவ்வளவாய் என் சுயத்தை வெறுக்க வேண்டுமென்ற தேவையையும், அனுதினமும் நான் சிலுவையை எடுக்க வேண்டுமென்ற தேவையையும்" நாம் கண்டு கொள்ள முடியும். இவ்விதக் கிரியை நமக்குள் நடைபெறும்பொழுது மாத்திரமே, ஐக்கியம் நமக்குள் நிலைவரப்படும்!!
சபையின் ஐக்கியத்தில் சொல்லிமுடியா வல்லமை அடங்கியுள்ளது. ஒன்றாய் இணைந்திருக்கும் ஒரு சபையில் மாத்திரமே சாத்தான் ஜெயிக்கப்பட முடியாது. "இரண்டு விசுவாசிகளே இருந்தாலும்" தங்கள் ஆவியில் முழுமையாய் ஒன்றாகி, சீரிய ஐக்கியம் கொண்டிருந்தால், பிதாவை அவர்கள் கேட்பது எதுவோ, அவ்விண்ணப்பங்கள் அவர்களுக்கு கேட்கப்படும்! ஏனெனில் இவ்விதம் "பரிசுத்தாவியினால் இரண்டு அல்லது மூன்று இணைந்த ஆத்துமாக்கள்
எங்கு ஒன்றாய் கூட்டப்பட்டார்களோ அங்கே நான் (இயேசு) என்னுடைய வல்லமையோடு பிரசன்னமாகுவேன். இவ்வித ஐக்கியத்தைக் கொண்ட விசுவாசிகள், உன்னதங்களில் உள்ள சாத்தானின் அதிகாரங்களையும், பூமியிலுள்ள அவனுடைய அதிகாரங்களையும் கட்டி சாத்தானின் வல்லமைகளை சிதறடிப்பார்கள்!! மேலும் இவ்வித ஐக்கியம் கொண்டவர்கள் தங்கள் ஜெபங்களின் மூலமாய் ஜனங்களை சாத்தானின் கட்டுகளிலிருந்து விடுவிக்கவும் செய்வார்கள்! (மத்தேயு 18:18-20 விரிவாக்க வசனங்கள்) என இயேசு கூறினார்.
ஜெபம்:
அன்புள்ள தந்தையே! ஒருவரையொருவர் அன்புகூரும் மெய்யான இயேசுவின் சீஷர்களாய் எங்களை மாற்றியருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments