இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 26
🔸️ நம்மை 'கண்டித்து' நடத்தும் நல்ல தகப்பன்! 🔸️
நாம் தேவனை பயபக்தியோடும் அண்டிச் சேருகிறோம். ஏனெனில் "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே!" (எபிரேயர் 12:29).
இன்று ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவனைத் தங்கள் "தாத்தாவாகவே" (Grand Father) எண்ணி வைத்திருக்கிறார்கள்!! தாத்தாக்கள் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என்பதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். "தாத்தாக்கள்" தங்கள் பேரப்பிள்ளைகள் எந்தத் தீய செயல்கள் புரிந்தாலும், அவைகளைக் 'கண்டும் காணாதது போல' அலட்சியமாக விட்டு விடுவார்கள். இன்று அநேக கிறிஸ்தவர்கள் தேவனைத் தங்களுக்கு தாத்தாவாக வைத்திருப்பதினிமித்தமே, பாவத்தை அவர்கள் கொடிய பயங்கரமாக எடுத்துக்கொள்வதே இல்லை! தேவனைத் தாத்தாவாக கொண்டிருக்கும் இந்த 'ஐடியா' முழுக்க முழுக்கத் தவறாகும். தேவனோ, நமக்கு ஒரு தகப்பன்!
அவர் தகப்பன் மாத்திரமல்ல, தேவாதி தேவனுமானவர். பரலோகத்தில் இந்த மகத்துவமானவருக்கு முன்பாக சேராபீன்கள் தங்கள் முகத்தை செட்டைகளினால் மூடி, "சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என பயபக்தியுடன் கூப்பிடுகிறார்கள் (ஏசாயா 6:3). ஒருபோதும் பாவம் செய்யாதவர்களே இந்த சேராபீன்கள்! இருப்பினும், தேவனை அவர்கள் கிட்டிச் சேரும்போது, தங்கள் முகத்தை மூட வேண்டியுள்ளதே! ஏனெனில் தேவனாகிய கர்த்தரின் பரிசுத்தத்தை இவர்களால் நேருக்கு நேர் காணக்கூடாமல் இருந்ததே அதற்கு காரணம்!
வேதாகமத்தில் தேவனுடைய தரிசனத்தைப் பெற்ற பரிசுத்தவான்கள் அடைந்த அனுபவத்தை எண்ணிப் பாருங்கள். ஏசாயா, தேவனுடைய மகிமையைக் கண்ட மாத்திரத்தில், தான் மிகவும் கேடான கொடிய பாவி என்ற உணர்வைப் பெற்றான் (ஏசாயா 6:5). மோசே, தேவனை நோக்கிப் பார்க்க பயந்து, தன் முகத்தை மூடிக்கொண்டான் (யாத். 3:6). தானியேல் தேவ தரிசனத்தைக் கண்டபடியால், தன் பெலனெல்லாம் போயிற்று என்றான் (தானி 10:8). யோவான் அப்போஸ்தலன் இயேசு கிறிஸ்துவின் தரிசனத்தைப் பெற்று, அவர்முன் செத்தவனைப் போல் விழுந்தான் (வெளி 1:17). பார்த்தீர்களா! இப்படியெல்லாம் இருக்க, இன்று அநேகர் தேவனை இவ்வித பயபக்தியுடன் அறிந்து கொள்ளாததினாலேயே அவர்களின் ஜீவியம் ஆழமற்ற தாயும், மேலோட்டமாயும் உள்ளது!!
ஜெபம்:
பரம தந்தையே! தந்தைக்குரிய அன்போடு, எங்களை கண்டித்துப் போதித்து நடத்துகிறீரே, அவ்வாறே எங்களை நடத்தும், இயேசுவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments