Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 24

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 24


🔸️ தேவாதி தேவன் நம் சொந்த தகப்பன்! 🔸️


யார் வேண்டுமானாலும் தேவனைப் பிதா என அழைத்துவிட முடியாது. இந்த பூமியில் நாம் யார் மூலமாக பிறந்தோமோ அவரையே நாம் பிதா என அழைத்திட முடியும். இதையே நாம் தேவனிடத்தில் ஜெபிக்கும்பொழுதெல்லாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவன் தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை தன் வாழ்வின் ஆண்டவராக இருக்கும்படி அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, தேவனுடைய பிள்ளையாக மறுபடியும் பிறப்பவனே, தேவனை நோக்கிப் "பிதா" அல்லது "தகப்பனே" என அழைத்திட முடியும்!


இஸ்ரவேலர்கள் தேவனை தங்கள் பிதா என ஒருபோதும் அழைக்க முடியவில்லை. "பிதா" என்ற பெயரை முதன் முதலாக இயேசுதான் அறிமுகம் செய்தார். பரமண்டலத்தில் இருக்கும் பிதாவிடம் இயேசு தொடர்பு கொண்ட போதெல்லாம் பிதா என்ற பெயரையே தொடர்ச்சியாக உபயோகித்தார். தேவனை "என் பிதா" என அழைப்பது சொல்லி முடியா ஒப்பில்லா சிலாக்கியம் ஆகும். இந்த சிலாக்கியத்தை இன்று அநேகர் உணராமல் இருப்பது துரதிருஷ்டமே ஆகும்.  


புதிய உடன்படிக்கையின் கீழ் வாழும் நமக்கு இந்த ஒப்பில்லா சிலாக்கியம் கையளிக்கப்பட்டுவிட்டதே! ஆம், திரை இரண்டாகக் கிழிக்கப்பட்டுவிட்டது!! இப்போது நாம் பிதாவின் சமூகத்திற்குள் பிரவேசிக்கும் தைரியத்தையும் பெற்று விட்டோம்! அவரை 'அப்பா' 'பிதாவே' என அழைக்கவும் செய்கிறோம்! புதிய உடன்படிக்கையின் இந்த ஒப்பில்லா சிலாக்கியத்தை எண்ணி எண்ணி வியக்க வேண்டுமென்றால், நீங்கள் பழைய ஏற்பாட்டை நன்றாக வாசித்திருக்க வேண்டும்!?


கெட்டகுமாரனின் உவமையில் நாம் தேவனை ஒரு தகப்பனின் இருதயம் உடையவராகக் காண்பது மிகுந்த வியப்பிற்குரியதாகும். அந்த கெட்டகுமாரன் தகப்பனின் ஆஸ்தியை வீணாக்கி, தன் தகப்பனின் பெயருக்கு அபகீர்த்தி உண்டு பண்ணிவிட்டு, மீண்டுமாக அவரிடம் திரும்பினான். அவனைக் கண்ட மாத்திரத்தில் அந்தத் தகப்பன் உடனடியாக ஓடிச் சென்று அவனை தழுவிக் கொண்டான். இங்கு தேவனை பிதாவாக சித்தரிக்கும் காட்சியை உங்களால் காண முடிகின்றதா? முழு வேதாகமத்திலும் இந்த ஒரு இடத்தில்தான் தேவன் ஓடிச்சென்று, மனந்திரும்பும் ஒரு பாவியைத் தழுவிக் கொள்ளும் காட்சியை நாம் காண்கிறோம்!! (லூக்கா 15:20).


ஜெபம்:

பரமண்டலங்களிலிருக்கின்ற எங்கள் பிதாவே! உம்மை எங்கள் சொந்த தந்தையாய் பெற்றிருக்கும் இந்த சிலாக்கியத்தை அருளிய எங்கள் இரட்சகர் இயேசுவுக்காய் நன்றி செலுத்துகிறோம்! ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments