இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 15
🔸️ தேவ கிருபையின் ஆச்சரியமான உதவி! 🔸️
நாம் சோதிக்கப்படும் நேரமே நம்முடைய தேவையான ஏற்ற வேளையாகும். கலிலேயாக் கடலில் பேதுரு மூழ்கிவிடும் அபாயத்தில் இருந்ததற்கு ஒப்பாகவே நாமும் தவறி விழப்போகும் நேரமே நாம் உதவி பெறத் தேவையான நேரமாகும் (மத்தேயு 14:30). அவ்வேளையில் பேதுருவைப் போலவே நாமும் கிருபைக்காக கூக்குரலிட வேண்டும். எங்ஙனம் பேதுரு கூப்பிட்ட வேளையில் உடனடியாக ஆண்டவராகிய இயேசு தன் கையை நீட்டி அவனை மூழ்க விடாமல் தூக்கி எடுத்தாரோ, அதைப்போலவே நாமும் கிருபையைப் பெற்று கீழே விழாமல் உறுதியாக நின்றிட முடியும்!
நாம் வழுக்கி கீழே விழுவதிலிருந்து தேவன் நம்மை காப்பார் என்ற நிச்சயத்தை அளிக்கும் அற்புதமான வாக்குத்தத்தங்கள் தேவனுடைய வார்த்தையில் உள்ளன. அவைகளில் சில வசனங்களை இங்கே பாருங்கள்:
எல்லாவற்றிற்கும் முதலாக, நம்மை மேற்கொள்ளும்படியான எவ்வித வலிமையான சோதனையும் நம்மை சோதித்திட தேவன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என இந்த நல்ல தேவன் வாக்குரைத்திருக்கிறார். அந்த அருமையான வாக்குத்தத்தத்தை கேளுங்கள்: "தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
(1 கொரி.10:13).
இன்னும் தேவனுடைய வார்த்தை சொல்லுவதை கேளுங்கள்: "வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்"
(யூதா:24) என்றும் வாசிக்கிறோம்.
இது போன்ற அருமையான வாக்குத்தத்தங்களும், இன்னும் அதிகமான வாக்குத்தத்தங்களும் தேவனுடைய வார்த்தையில் அடங்கியிருக்கும்போது, இனியும் நாம் பாவம் செய்ய வேண்டியது ஒருபோதும் அவசியமே கிடையாது! இனிமேல் 1 பேதுரு 4:2-ம் வசனம் கூறுகிறபடி, தேவனுடைய சித்தம் மாத்திரமே செய்து நாம் பிழைத்து வாழ முடியும்!
ஜெபம்:
பரலோக தந்தையே! சோதனையில் எமது கூக்குரலுக்கு ஓடோடி வந்து "கிருபையின்" உதவியைத் தரும் உம் அன்பிற்கு நன்றி! வழுவாதபடி வாழ கிருபை தாரும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments