Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 17

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 17


🔸️ வேத தியானமின்றி தேவ வளர்ச்சி இல்லை! 🔸️


இவ்வுலகில் ஓரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு உணவும், காற்றும் ஆகிய இவ்விரண்டும் மிகவும் தேவையாய் இருக்கிறது. இதற்கு ஒப்பாகவே ஓர் ஆவிக்குரிய பிறப்பின் அனுபவமும் இருக்கின்றது. ஒரு புதிதாய்ப் பிறந்த தேவனுடைய குழந்தை புசிக்கவும், சுவாசிக்கவும் வேண்டும். அக்குழந்தைக்கு தேவனுடைய வசனமே உணவாகவும், ஜெபமே ஜீவசுவாசமாகவும் மாறுகிறது!


தேவனுடைய வசனம் - நம்முடைய ஆவிக்குரிய உணவாகும். 


ஒரு குழந்தை வளர்வதற்கு, ஆரம்பத்தில்தான் பால் உணவு தேவையாய் இருக்கின்றது. ஆனால் அக்குழந்தை வளர்ச்சியடையும் போதோ, பலமான ஆகாரம் (solid food) தேவையாய் இருக்கின்றது. "கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேசங்களே" பால் உணவாகும் (எபி. 6:1). "நீதியின் வசனமோ" (The word of Righteousness) (எபி 5:13) பலமான ஆகாரமாயிருக்கிறது. தேவன் நமக்குத் தரும் வெளிச்சத்திற்கு எவ்வளவு துரிதமாய் நாம் கீழ்ப்படிகிறோமோ, அதைப் பொறுத்துத்தான் நாம் எவ்வளவு சீக்கிரத்தில் பலமான ஆகாரத்தைப் புசித்திட ஆரம்பிப்போம் என்ற கால அளவு நிர்ணயிக்கப்படுகின்றது. 


நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி விசுவாசத்தையும் (FAITH) + கீழ்ப்படிதலையும் (OBEDIENCE) சார்ந்திருக்கிறது. நாம் தேவனையே விசுவாசித்து சார்ந்து கொள்ளும்படி, தேவன் தன்னுடைய வார்த்தையில் நமக்கு வாக்குத்தத்தங்களை தந்திருக்கின்றார். அதேபோல நாம் கீழ்ப்படிவதற்காகவே, தேவன் நமக்கு அவருடைய வார்த்தையில் கட்டளைகளையும் தந்திருக்கின்றார். நாம் ஒழுங்காக (regularly) 

தேவனுடைய வார்த்தையைத் தியானித்து அவரை விசுவாசித்து சார்ந்து கொண்டு, தேவனுக்குக் கீழ்ப்படிவோமென்றால், நாம் தேவனுக்குள் ஆழமாய் வேர்விட்டு ஓர் இலை உதிராதிருக்கும் கனிதரும் மரம்போல் செழித்தோங்கி நிற்பதை நம்மில் நாம் கண்டுகொள்ள முடியும். மேலும் நாம் செய்வதெல்லாம் வாய்க்கும்படியாகவும் இந்த நல்ல ஆண்டவர் நம்மை ஆசிர்வதித்திடுவார்! (சங்கீதம் 1:2,3).


ஜெபம்:

பரம தந்தையே! உணவில்லாமல் சரீர வளர்ச்சி இல்லையே ....உம் அனுதின வேத வசன தியானம் இல்லாமல் நாங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்திட இயலாது என்பதை உணர்ந்திருக்கிறோம்! நாள்தோறும் வேத தியான வாழ்வை பற்றி வாழ அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments