இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 5
🔸️ கிறிஸ்துவின் மகிமையை அள்ளித்தரும் சிலுவை! 🔸️
சோதனைக்கும் (Temptations) உபத்திரவங்களுக்கும் (Trials and Tribulations) வித்தியாசங்கள் உண்டு. நாம் பாவம் செய்திட தூண்டப்படுவதே சோதனை! உபத்திரவங்களோ நம்முடைய "சுயத்தை" தூண்டுகிறது!
பாவத்தை "கருப்பு நிறமாகக்" காணும் அநேக கிறிஸ்தவர்கள், 'சுயம்' அல்லது தங்கள் சொந்த ஜீவனாகிய "சுய-விருப்பங்கள்", "சுய-உரிமைகள்", "சுய-கௌரவங்கள்", "சுய-நியாயங்கள்", "சுய-பட்ச பாதங்கள். . . " ஆகிய இவைகளை பாவத்திற்கு இணையாக "கருப்பு நிறமாய்" காண்பதில்லை. ஏனெனில் தங்கள் நியாயத்திற்காகப் போராடுவதையும், உரிமைகளைத் தட்டிப் கேட்பதையும், சுய-கௌரவம் இழக்காமல் பார்த்துக் கொள்வதையும் இவ்வுலகம் பாவமாகக் கருதுவதில்லை.
சோதனையில் அடைந்திடும் "மாம்சத்தின் மரணம்" பாவத்தை ஜெயித்திட நடத்துகிறது. உபத்திரவங்களில் அடைந்திடும் "சுயத்தின் மரணம்" கிறிஸ்துவின் மகிமையை அல்லது அவருடைய சாயலை நமக்கு கொண்டு வருகிறது!
நமக்கு முன்னோடியான நம் கேப்டன் இயேசு கிறிஸ்து, "தேவனுடைய கிருபையினால் முழுமையாக மரணத்தை (இந்த இருவகையான மரணத்தையும்) ருசித்தார்" என எபிரேயர் 2:9ல் வாசிக்கிறோம். தேவ கிருபையைக் கொண்டு தங்கள் பாவத்திற்கு சாகாத கிறிஸ்தவர்கள் ஒருக்காலும் "சுயத்திற்கு மரிக்கும்" இடத்தை நெருங்கவே முடியாது!
தண்டில் சேவகம் பண்ணுகிற நமக்கு (இயேசு கிறிஸ்துவின் ராணுவத்தில் இணைந்திருக்கும் நமக்கு) இவ்வுலக வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளுக்குள்ளும் பாடுகளுக்குள்ளும் பிரவேசிக்கும்போதுதான் யுத்தம் ஆரம்பிக்கிறது. இந்த யுத்தம் மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எதிர்த்து நடத்தும் யுத்தம் அல்லவே அல்ல! நாமோ எல்லா சூழ்நிலைகளுக்காகவும், எல்லா மனிதர்களுக்காகவும் ஸ்தோத்திரமே செய்கிறோம்!
ஆம், மனுஷர்கள் மூலமாய், சூழ்நிலைகள் மூலமாய், நமக்குள் இருந்து எழும்பும் வலிமையான சுயத்தை எதிர்த்தே யுத்தம் செய்கிறோம்!
நமது கேப்டனாகிய "இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் போர்ச் சேவகர்களாக" இருக்கும் நாம், "நம்மை நாமே வெறுத்து" (சுயத்தை வெறுத்து) சுயத்திற்கு மரணத்தைக் கொண்டு வரும் ஆயுதமாகிய சிலுவையை "அனுதினமும்" எடுத்தே அவரைப் பின்பற்றி வரவேண்டும்!! (லூக்கா 9:23).
ஜெபம்:
பரம தந்தையே! எங்கள் அனுதின சிலுவை மூலமாய், உபத்திரவங்களின் வழியாய், கிறிஸ்துவின் மகிமையை சுதந்தரிக்க வழி காண்பித்தீரே! உமக்கே ஸ்தோத்திரம்! குருவின் வழி நடக்க பெலன் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments