Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் 06

 இன்று "அவருடைய" சத்தம்


ஏப்ரல் 6


🔸️ தேவசித்தம் செய்வது ஒன்றே நிலைத்திருக்கும் ஜீவியம்! 🔸️


'இயேசு இந்த பூமிக்கு ஏன் வந்தார்?' என்ற கேள்விக்கு "பிதாவின் சித்தம் செய்யவே இயேசு வந்தார்" என வேதம் கணீரென ஒலிக்கிறது. இதை இயேசுவே யோவான் 6:38-ல் "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்" எனக் கூறினார். இவ்வுலகத்தின் பாவங்களுக்காக மரிக்கும்படி மாத்திரமே அவர் பிரதானமாய் இப்பூமிக்கு வரவில்லை! ஆம், தன் பிதாவின் சித்தம் செய்யவே இப்பூமிக்கு அவர் வந்தார். இயேசு கல்வாரிக்குச் சென்று தன் ஜீவனைக் கொடுத்தார். ஆகிலும், அவ்விதம் கல்வாரியில் மரித்ததும்கூட அவர் தன் வாழ்வில் பிதாவின் சித்தம் செய்வதின் ஒரு பங்காகவே இருந்தது!! 


"நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே, என்னுடைய போஜனமாயிருக்கிறது" என இயேசு யோவான் 4:34ல் கூறினார். கடும்பசி கொண்ட ஒரு மனிதன், உணவிற்காக கூக்குரலிடுவது போல, இயேசுவின் முழு ஆள்த்துவமும் பிதாவின் சித்தம் செய்வதற்கு கூக்குரலிட்டது. இவ்விதம் தங்கள் ஜீவியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசுவைப் போலவே பிதாவின் சித்தம் செய்ய வேண்டும் என வாஞ்சித்துத் தவிப்பவர்கள் மாத்திரமே இயேசுவை உண்மையாய் பின்பற்றுகிறவர்கள்!!


"இப்படியிருக்க கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால் நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக தரித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்தில் இருக்கும் காலம் வரைக்கும் மனுஷனுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாக பாவங்களை விட்டோய்ந்திருப்பான்" என 1பேதுரு 4:1,2 வசனங்களில் பேதுரு கூறினார். இதைப் போலவே, யோவான் அப்போஸ்தலன் தன் நிருபத்தில், "உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" (1யோவான் 2:17) எனக் கூறினார். 


விசுவாசிகளுக்காக அப்போஸ்தலர் கொண்டிருந்த பாரம் நிறைந்த ஜெபமெல்லாம் "அவர்கள் தேவனுக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாய் நிலைநிற்க வேண்டும்" என்பதாகவே இருந்தது (கொலோ.4:12). ஒரு மனிதன் தன் மீதியான ஜீவிய காலமெல்லாம் தேவசித்தம் செய்வதற்கு அர்ப்பணிக்கும்படி அவனை நடத்தாமல், வெறும் பாவமன்னிப்பிற்கு மாத்திரம் நடத்திடும் இரட்சிப்பு, ஒரு நிலையற்ற இரட்சிப்பு என்பதை அப்போஸ்தலர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.


ஜெபம்:

அன்பின் தந்தையே! எங்கள் வாழ்வின் பாரம் வேறு எதுவும் இல்லாமல், "தேவ சித்தம்" செய்வதே எங்கள் பிரதான பாரமாய் மாறிட தயை புரிந்தருளும்! இயேசுவின் நாமத்தில், ஆமென்.   


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments