இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 11
🔸️ "சுயம் சிலுவையில் அறையப்படுவதே" அபிஷேகம் பெற்றிட வழி! 🔸️
ஜெஸி-பென்-லூயிஸ் என்ற சகோதரி எழுதிய புத்தகங்கள், ஏராளமான ஜனங்கள் "சிலுவையின் பாதையை" தெளிவாக அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியது. இந்த சகோதரி மனந்திரும்பிய பத்து வருடங்களுக்குப் பிறகுதான் பரிசுத்தாவியின் நிறைவை நாடினார்கள். அச்சமயம், அவர்கள் தேவனிடமிருந்து பெற்ற ஒரு தரிசனம் மிகவும் பயங்கரமானதாகவே இருந்தது:
"ஒரு கரம் ஏராளமான கந்தையான குப்பைகளைப் பிடித்துக் கொண்டிருக்க, அதன் பின்னால் இருந்து ஒரு மெல்லிய குரல் 'நீ காணும் இவைகள் அனைத்தும் கடந்த ஆண்டுகளில் நீ தேவனுக்கு செய்த ஊழியங்களின் விளைவுகளேயாகும்' என தொனித்தது!" இந்த தரிசனத்தைக் கண்ட அந்த அம்மையார், அந்தக் கூற்றை உடனடியாக மறுத்து, கடந்த ஆண்டுகளில் "தன்னை தேவனுக்கு அர்ப்பணம் செய்து ஊழியம்" செய்ததாகவே கூறினார்கள்! ஆனால் அதற்கு ஆண்டவர் "உன்னுடைய ஊழியங்கள் அனைத்தும் உன் சொந்த முயற்சியிலும், திட்டத்திலும் உருவான சுய-அர்ப்பணிப்புகளேயாகும்" எனக் கூறிவிட்டார். பின்பு "சிலுவையில் அறையப்படுவாயாக" என்ற ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் தனக்கு சொல்லப்பட்டதையும் அந்த அம்மையார் தரிசனம் கண்டார்.
இந்த தரிசனத்தைக் கண்ட அந்த அம்மையார், நானோ "பரிசுத்தாவியினால் நிறையப்பட" விண்ணப்பித்தேன்! தேவனோ "சிலுவையில் அறையப்படுவாயாக" எனக் கூறுகிறாரே, எனப் பேதலித்தார்!!
ஆகிலும், அன்றிலிருந்து "சிலுவையில் அறையப்படுவாயாக" என்ற அந்த ஒரு வார்த்தையில் முழு கவனம் வைத்து அந்த அம்மையார் தியானிக்க தொடங்கினார்கள். அதன் விளைவாய் "இயேசுவைத் தனக்குச் சொந்தமான உயிர்த்தெழுந்த ஆண்டவராய்" அறிந்து கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றார்கள்!!
ஆம், தேவனுக்குப் பிரியமானதாய் எந்த ஒரு ஊழியமும் இருக்க வேண்டுமென்றால், "முதலாவதாக சுயம் சிலுவையில் அறையப்பட வேண்டும்!" அதைவிடுத்து, நம் முழு இருதயமாய்கூட தேவனுக்கு ஊழியம் செய்து விட்டு. . . "ஆண்டவரே நான் உருவாக்கிய இந்த 'இஸ்மவேலர்களை' தயவு செய்து ஏற்றுக் கொள்ளும்" எனக் கூறினால், அதற்குத் தேவன் இன்றும் "முடியாது" என்று தான் பதில் கூறுவார்... நித்தியத்திலும் முடியாதென்றேதான் கூறுவார்!
ஜெபம்:
பரம பிதாவே! எங்கள் சுயபெலன் முற்றிலும் ஒழிந்து பரிசுத்தாவியின் அபிஷேகத்தை எங்களுக்குத் தர வழி வகுத்த "உம் சிலுவை வழிக்காக" ஸ்தோத்திரம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments