இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 14
🔸️ நித்திய வழியில் நடத்தும் நம் தேவன்! 🔸️
தேவன் நம்மிடம் பல்வேறு வழிகளில் பேசி எப்படியாவது நமக்கு வெளிச்சத்தை தந்து நம்மை அழிவுக்கு நேரான நரகத்திலிருந்து இரட்சித்திடவே விரும்புகிறார் (யோபு 33:14-17).
உதாரணமாக, அசுத்தமான கனவுகளைக் கண்டவர்கள் என்ன செய்திட வேண்டும்? "உன் சிந்தை வாழ்க்கை கெட்டுப்போய் இருப்பதை பார்!" என்ற தேவனுடைய குரலையே அங்கு கேட்டிட வேண்டும்!! பயம் தரும் கனவுகளைக் கண்டவர்கள் என்ன செய்திட வேண்டும்? "இளைப்பாறுதலை இழந்த உன் இருதயத்தின் நிலையைப் பார்!" என்ற தேவனுடைய குரலையே அங்கு கேட்டிட வேண்டும்!! தாங்கள் சுகவீனமானதின் நிமித்தம் உடனே மருத்துவரிடம் ஓடுகிறார்களே, அவர்கள் என்ன செய்திட வேண்டும்? "உன் செயலினிமித்தம் சிட்சிக்கும் தேவனுடைய கரத்தைப் பார்!" என்ற தேவனின் குரலையே அங்கு கேட்டிட வேண்டும்!!
ஆம், கர்த்தருடைய சிட்சையை நாம் அற்பமாக எண்ணிவிடக் கூடாது! ஏனெனில், தான் பிரியமாய் நேசித்திடும் புத்திரர்களை மாத்திரமே அவர் சிட்சிக்கிறார். "நம் குரலில் தொனித்த கடுமையினிமித்தம்கூட" அவர் நம்மைச் சிட்சித்தால், நம்மீது கொண்ட அவரது அளவற்ற அன்பின் நிமித்தம் நாம் உண்மையாகவே களிகூர்ந்து மகிழ்ந்திட வேண்டும்!
இது போலவே, தேவனோடு நெருங்கிய உறவு கொண்ட ஒரு தேவ மனிதன் நம்மை எச்சரித்து புத்தி சொல்வதும், நமக்கு கிடைத்த பாக்கியம் என்றே கூறவேண்டும் (யோபு 33:23).
அதுபோன்ற தேவ மனிதர்களின் எச்சரிப்பிற்கு நாம் இணங்கிவிட்டால், நாம் தேவனுடைய முகத்தையே கண்டவர்களாய் களிகூர்ந்து, "நான் படுகுழியில் இறங்காதபடி தேவன் என்னை இந்த தாசன் மூலமாய் மீட்டுக்கொண்டார்!" (யோபு 33:27,28) என சாட்சி பகிர்ந்திட முடியும்!!
ஜெபம்:
அன்பின் தந்தையே! உம்மைச் சார்ந்து வாழும் எங்களை வழி தவறிடாமல், பல்வேறு சிட்சையின் சம்பவங்களில் உம் குரலை நாங்கள் கேட்டு சரியான பாதை நடந்திட கிருபை தாரும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments