இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 27
🔸️ இயேசுவின் சிலுவை கற்பிக்கும் "தெய்வ அன்பே" நமக்கு வேண்டும்! 🔸️
அன்பற்ற சூழ்நிலையை நாமும் அன்பற்ற உள்ளத்தோடு சந்திக்கலாமா? இவ்வித சூழ்நிலைகளில்தான், "தேவரீர் என் இருதயத்தில் தோன்றும் எல்லா தடைகளையும் அகற்றிவிட்டு உம்முடைய அன்பை எனக்குள் ஊற்றிவிடும்!" (ரோமர் 5:5) என ஜெபித்து கதறுபவர்களாய் இருக்க வேண்டும்!!
தேவ அன்பு நம்மில் பூரணமாய் ததும்பி வழியும் மட்டும் இக்கதறல் நம்மோடு இருக்கட்டும்! இவ்வாறு நம்முடைய அன்பற்ற தன்மைக்காய் தீராத துயரம் கொண்டு தேவனிடத்தில் நாம் திரும்பி, "தேவனே என் இருதயத்தை உம்முடைய அன்பினால் நிறைத்துவிடும்!" என நாம் ஜெபித்திடும் நிலைக்கு வருவதை காண்பதற்கு தேவன் எவ்வளவாய் தவித்து காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம்!
இந்த அன்பின் ஜீவியத்தை வாழ்ந்துவிடும்படி தீராத வாஞ்சை கொண்டவர்கள் மாத்திரமே, பரிசுத்த ஆவியானவர் தங்களை நிறைத்துவிடும்படியாய் எப்போதும் தங்கள் இருதயத்தை கழுவி சுத்திகரித்துக் கொள்ள ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள். தேவனும் இவர்களின் இதயக் கூக்குரலைக் கேட்டு அவர்களை மீண்டும் மீண்டுமாய் தம் அன்பினால் நிறைத்துக் கொண்டே இருக்கிறார்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசுவை இந்த தெய்வீக அன்பே சம்பூரணமாய் நிறைத்து அவரை சிலுவைக்கு நடத்திச் சென்றது.
ஆம், இந்த அன்பே நம் இரட்சகரை சிலுவையில் தொங்கும்படி செய்தது! அதே அன்பு நம் உள்ளத்தை நிரப்பி விட்டால்....! நம்முடைய சகோதரர்களுக்காக ஜீவனையே கொடுப்பதற்கும் ஆயத்தமான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாய் 'அந்த அன்பு' நம்மை மாற்றிவிடும்!!
ஜெபம்:
அன்பின் தகப்பனே! அருமை ஆண்டவர் இயேசுவின் மாதிரியின்படியே "சிலுவையில் நாங்கள் மரித்து" பிறரை நேசித்திட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments