Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் 29

 இன்று "அவருடைய" சத்தம்


ஏப்ரல் 29


🔸️ நொறுங்குண்ட ஜீவியமே, தெய்வீக பிரதிபலிப்பை தர முடியும்! 🔸️


"தேவ சமூகத்தை அப்பியாசித்தல்" என்ற சிறந்த புத்தகத்தின் மூலமாய் சகோதரர் லாரன்ஸ் அனேகருக்கு அறிமுகமானார். இந்த லாரன்ஸ் ஒரு கல்வி நிலையத்தின் சமையலறையில் வேலை செய்த ஒரு சாதாரண சகோதரன். அவர் வேலை செய்து கொண்டிருந்த சமையலறையில் இருக்கும் மற்றவர்கள் எப்போதும் வெவ்வேறு காரியங்களினிமித்தம் "கூச்சல்" உண்டு பண்ணிக் கொண்டே இருப்பார்கள். பாத்திர பண்டங்களின் இரைச்சலும் அவரைச் சுற்றி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இருப்பினும், இவைகளின் மத்தியில் அவருடைய ஆவியோ சிறிதும் பாதிக்கப்படாமல் இருந்தது. தன்னுடைய தனி ஜெபத்தில் எந்த அளவு தேவ சமூகத்தை உணர்ந்தாரோ, அதே அளவு சமையலறை இரைச்சலின் மத்தியில் தேவனுடைய பிரசன்னத்தை அவரால் உணர முடிந்தது! அந்த அளவிற்கு சகோதரர் லாரன்ஸ் தன்னுடைய மனுஷீக ஆத்தும ஜீவனை வெறுத்து, தன்னுடைய ஆவியில் தேவனோடு நெருங்கிய தொடர்பு கொள்ள கற்றுக்கொண்டிருந்தார். ஆ, இது பாக்கியம்!!


இன்று அநேகர் தங்களைச் சுற்றிலும் பாத்திர ஓசைகள் போன்ற தொந்தரவிலிருந்து விடுபட்டால்தான் தேவ பிரசன்னத்தை பெற்றிட முடியும் என எண்ணுகிறார்கள். மனுஷர்களை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்களோ, அவ்வளவாய் தேவ பிரசன்னத்தை உணர முடியுமென இவர்கள் எண்ணுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு!! தொந்தரவு, பாத்திர பண்டங்களிலோ அல்லது மற்ற ஜனத்திடமோ இல்லை. . . மாறாக, இவர்களேதான் இவர்களுக்குத் தொந்தரவாய் இருக்கிறார்கள்!! பாத்திர பண்டங்களின் ஓசையிலிருந்து தேவன் நம்மை விடுவிக்கப் போவதில்லை. ஆனால் இவைகளின் மூலமாக உண்டாகும் பிரதிபலிப்புகளிலிருந்து அவர் நம்மை நிச்சயம் விடுவிக்க முடியும்.


நம்மைச் சுற்றிலும் வெளியே உள்ள சத்தம் எவ்வளவு இருந்தாலும், நாம் நொறுக்கப்பட்டு விட்டால், நமக்குள்ளிருந்து பிரதிபலிப்பு ஏதும் தோன்றாது (யோவான் 12:24,25). நம்முடைய வெளிப்புற கடின ஓடு ஆண்டவரால் உடைக்கப்பட்டபடியால் எந்த சத்தத்தையும் கேட்காதவர்களைப் போலவே நம்முடைய பிரதிபலிப்பு இருந்திட முடியும்! 


ஜெபம்:

அன்பின் பிதாவே! எங்கள் ஜீவியத்தின் பிரதிபலிப்பு தேவபக்திக்கு ஏற்றதாய் இருக்க வகைசெய்திடும் "சுயம் நொறுங்கும் வாழ்வை" எங்களுக்கு கற்றுத்தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments