Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் 02

 இன்று "அவருடைய" சத்தம்


ஏப்ரல் 2


🔸️ சிலுவையின் உபதேசமே, தேவபெலன்! 🔸️


"நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பிரசங்கிக்கிறோம், அவர் யூதருக்கு இடறலாயும் . . .(1கொரி.1:23) என வாசிக்கிறோம். கிறிஸ்து நமக்காக சிலுவையில் அறையப்பட்டாரே அதுவா இன்றைய கிறிஸ்தவ மார்க்கத்தாருக்கு இடறல்? இல்லை! "நாம் சிலுவையில் அறையப்படுகிறோமே" அதுதான் இவர்களுக்கு இடறல். ஏனென்றால், இங்குதான் நம் எல்லா சுயமும் அது எவ்வளவு அருமையாய் இருந்தாலும் அல்லது எவ்வளவு லாபமாயிருந்தாலும் அவைகள் கொஞ்சமும் இரக்கமில்லாமல் புறக்கணித்துத் தள்ளப்படுகிறது! அதன் சுயமரியாதைக்கோ கொஞ்சமும் இடமே இல்லை!! ஆ, இங்குதான் இவர்கள் கோபம் கொள்ளுகிறார்கள். தங்கள் பார்வையில் இவர்கள் எவ்வளவு திறமையாய்க் காணப்பட்டு சுயத்தில் மகிழ்கிறார்களோ அவ்வளவு அதிகம் கோபக்கனல் ஆகிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமக்கு அருமையான இந்த எல்லா சுயமும் மரணத்திற்கே உரியது! அது கிறிஸ்து இயேசுவின் மூலமாய் சிலுவையில் அறையப்பட்டு விட்டது!! அது இருக்க வேண்டிய இடம் அதுதான்!!


1 கொரிந்தியர் 1:17-ம் வசனத்தில், "கிறிஸ்துவின் சிலுவை வீணாய் (அல்லது வல்லமையற்றுப் போகாதபடிக்கு)..." என்றும் 18-ம் வசனத்தில் "சிலுவையைப் பற்றிய உபதேசம்.... நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது" என்றும் வாசிக்கிறோம். சிலுவையின் உபதேசத்தில் அல்லது சிலுவையில் அப்படி என்ன வல்லமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? கேளுங்கள்: 


அது பழைய மனிதனுக்கும் அவன் கிரியைகளுக்கும் சாவு மணி அடிக்கிறது! அவ்வல்லமை பாவத்திலிருந்து விடுதலை அளிக்கிறது! மாம்சத்தின் கிரியைகளை ஒழிக்கிறது! ஏற்கனவே நாம் பாவம் என்று அறிந்து கொண்டவைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! மட்டுமல்ல, நாட்கள் செல்லச் செல்ல நாம் இனி பாவம் என அறிந்து கொள்ளப்போகும் எல்லாப் பாவத்திலிருந்தும் விடுதலை! விடுதலை!! சுயத்தை ஆக்ரோஷமாய் சிலுவையில் அறைகிறோமே, அதுவே சிலுவையின் வல்லமையான கிரியைகள். ஆம்! அந்த ஆணிகள் சிலுவையில் அறையப்பட்டவனை, அவன் விரும்பும் இடத்திற்குப் போக முடியாமல், வலிமையாய் சிலுவையின் மேல் இருத்தி வைக்கிறது ...பின்பு...பின்பு... கொஞ்சம் கொஞ்சமாய் சீக்கிரத்தில் அவன் செத்துப்போகிறான். இவ்வாறு மாம்சத்தின்படியான என்னை சாகடிக்கிறதே, அதுதான் இச்சிலுவையின் வல்லமையான கிரியைகள்!!"


ஜெபம்:

பரம தந்தையே! நாங்களும் இயேசுவைப் போலவே சிலுவையில் அறையப்பட வேண்டும் என்ற இந்த உபதேசத்தை மனதார ஏற்றுக்கொள்கிறோம்! நடைமுறையில் அதை வாழ்ந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments