Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் 25

 இன்று "அவருடைய" சத்தம்


ஏப்ரல் 25


🔸️ தேடிவரும் செல்வம் நம்மை தேவ ராஜ்ஜியத்திலிருந்து பிரிக்கக் கூடும்! 🔸️


ஒரு நாள், இயேசு கிறிஸ்து பேதுருவின் படகில் ஏறி, படகை ஆழ்கடலுக்கு கொண்டு சென்று மீன் பிடிக்கும்படி வலையை போடச் சொன்னார். பேதுரு அப்படியே செய்தபோது, தன் வாழ்க்கையில் இதுவரை பிடித்திராத அளவு அதிகமான மீன்களை பிடித்தான் (லூக்கா 5:1-11). தற்கால கிறிஸ்தவ வியாபாரிகளைப் போல பேதுரு இருந்திருந்தால், "கர்த்தாவே இது மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது. நீரும் நானும் பங்குதாரராய் இருக்கலாம். நீர் பிரசங்கம் செய்யும்; நான் உம்மை பணம் கொடுத்து ஊழியத்தை தாங்குகிறேன்! என்னுடைய மீன் வியாபாரம் இப்படி பெருகுமானால், சீக்கிரம் இஸ்ரவேலிலேயே நான் பணக்கார வியாபாரியாக ஆகிவிடுவேன்!! மேலும் என்னுடைய தசமபாகம் உமக்கு மட்டுமல்ல, இந்த தேசத்தில் பல இடங்களில் இருக்கிற கிறிஸ்துவ ஊழியர்களுக்கும் உதவியாக இருக்கும்" என பலவாறு அவன் இயேசுவிடம் சொல்லியிருப்பான். மேலும் பேதுரு, உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தனது சாட்சியை வியாபாரிகளுக்கான அநேக கூட்டங்களில் சொல்லி, வியாபாரத்தைச் செழிக்க வைக்கிற கிறிஸ்துவிடம் வியாபாரிகளை இழுத்துக் கொள்ளலாம் எனவும் எண்ணியிருக்கக்கூடும். மாம்சத்துக்குரியவர்களின் யோசனை இப்படித்தான் இருக்கும்!


ஆனால், பேதுரு அப்படிச் செய்யவில்லை! தனது மீன் பிடிக்கிற தொழிலையே விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினான். ஆம், அவன் அந்தச் சோதனையில் வெற்றி பெற்றான். 


மிகுந்த பொருள் சம்பாதிக்க அனுகூலமாய், தங்கள் வழிகளை செழிப்பாக்குவதன் மூலம் தேவன் தங்களை சோதிக்கிறார் என்பதை, கிறிஸ்தவர்கள் கொஞ்சமும் உணர்வதில்லை. அநேகக் கிறிஸ்தவர்கள் இந்தச் சோதனையில் தோற்றுப் போகிறார்கள். அவர்கள் ஒருவேளை அப்போஸ்தலர்களாய் ஆகியிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, மாயையான 'கோடீஸ்வரர்களாய்' ஆகிவிடுகிறார்கள்! 


பல வருடங்களுக்குப் பிறகு பேதுரு, ஒரு பணக்கார வியாபாரியின் வங்கித் தொடர்பிற்கு வெகு தூரமாகி, "வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை" என்று சொல்ல முடிந்தது (அப்.3:6). ஆனால் அதைவிட மேலானதொன்று அவனிடமிருந்தது. கிறிஸ்துவின் இராஜ்ஜியத்திற்குரிய நித்திய செல்வத்தைப் பெறும்படிக்கு, குப்பையான இவ்வுலகச் செல்வத்தை இழந்தான்!!


ஜெபம்:

அன்பின் தகப்பனே! எங்களுக்கு கிடைத்த செல்வத்தில் நாங்கள் சோதிக்கப்படுகிறோம் என்ற எச்சரிப்பைத் தந்தமைக்கு நன்றி! சோதனையில் உண்மையாய் இருந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments