Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 01

 இன்று "அவருடைய" சத்தம்


மே 1


🔸️ பரிசுத்தாவியானவரின் நடத்துதலுக்கு நாம் இணங்கக்கடவோம்! 🔸️


பரிசுத்தாவியானவர் சர்வ ஆளுகை கொண்டவர் என்பதையும், 'பல்வேறு வழிகளில் கிரியை செய்பவர்' என்பதையுமே நாம் முதலாவதாக அறிந்திருக்க வேண்டும். இதை இயேசு குறிப்பிட்டுக் கூறும்போது, "காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. . . ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும் இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது! அதுபோலவேதான் ஆவியானவரும் இருக்கிறார்" (யோவான் 3:8) எனக் கூறினார். உண்மைதான், காற்றை நாம் ஆளுகை செய்திட முடியாது. என்ன வேகத்தில் வீச வேண்டும் என்றோ அல்லது அது வீசும் திசையையோ மாற்றி அமைத்திட நம்மால் முடியாது. அதுபோலவேதான் பரிசுத்தாவியானவரும் இருக்கிறார்! இருப்பினும் இன்றைய அநேக விசுவாசிகளோ, பரிசுத்த ஆவியானவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அவர்கள் விரும்பிடும் வழி முறைகளுக்கேற்ப அவரின் கிரியையை நடப்பிக்கலாம் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!!


திரித்துவத்தின் இரண்டாமவர் (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து) இப்பூமியில் இருந்தபோதும், பரிசேயர்கள் அவரைத் தங்களின் சின்னச் சின்ன விதிகளையும், பாரம்பரியங்களையும் வைத்து அவரைக் கட்டி வைக்க முயற்சித்தார்கள். ஆனால் அவரோ அவர்களின் 'குறுகலான அறைக்குள்' பூட்டப்பட மறுத்துவிட்டார்! இந்த பரிசேயர்களின் வழித்தோன்றல்களாக, இன்றும் சுவிசேஷ ஊழியங்களில் இருப்பவர்கள் திரித்துவத்தின் மூன்றாவது நபரை (பரிசுத்த ஆவியானவரை) தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து, தங்கள் பாரம்பரியங்களின்படியும் மனுஷீக அறிவின்படியும் அவரைக் கொண்டு கிரியை நடப்பித்திட முயற்சிக்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரோ மனுஷர்கள் வகுத்த விதிமுறைகளின்படி கிரியை செய்திட எக்காலத்திலும் மறுத்துவிடுகிறார்!! ஆம், அவர் எங்கே விரும்புகிறாரோ, அங்கேதான் வீசுவார். அவர் கிரியையின் சத்தத்தை நாம் கேட்கலாம், ஆனால் அவரோ நம்முடைய எந்த கட்டுப்பாட்டிற்கும் அல்லது எந்த திசை திருப்புதலுக்கும் இணங்கவே மாட்டார்!! 


அவர் நம்மிடத்தில் கிரியை செய்தது போலவே பிறருடைய வாழ்விலும் கிரியை செய்ய வேண்டுமென நாம் ஒருக்காலும் எதிர்பார்த்திட முடியாது! அதுபோலவே, கடந்த காலத்தில் அவர் எப்படி கிரியை செய்தாரோ அதுபோலவேதான் இப்போதும் கிரியை செய்திட வேண்டும் எனவும் நாம் எதிர்பார்த்திட முடியாது! ஆம், அவர் சர்வ ஆளுகை கொண்டவர்!


நாம் செய்திடக் கூடிய சிறந்த காரியம் என்னவென்றால், காற்று வீசும் திசையை நோக்கி நம் முகத்தை திருப்பி, அந்தக் காற்று எங்கு நம்மை எடுத்துச் செல்ல விரும்புகிறதோ, அதற்கு இணங்குவதேயாகும்!


ஜெபம்:

எங்கள் பரம தந்தையே! நாங்களாக வாழ்ந்த வாழ்க்கை வெறுமை! எம்மை ஆட்கொண்ட பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்கு மகிழ்ச்சியுடன் எங்களை ஒப்புவிக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:- https://t.me/hisvoicetoday

‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧

Google Drive • Ebook • Download Now:


https://drive.google.com/folderview?id=19Jovj4_rjWgGPPs49g4GNX8GIP6756rA




Post a Comment

0 Comments