Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 13

 இன்று "அவருடைய" சத்தம்


மே 13


🔸️ தேவபக்தியின் தாகம் நாளுக்கு நாள் பெருகிட வேண்டும்! 🔸️


ஓர் உயர்ந்த தேவபக்தியான வாழ்க்கையை பவுலால் எவ்வாறு வாழ முடிந்தது என்ற இரகசியத்தை பிலிப்பியர் 3-ம் அதிகாரத்தில் நாம் காணமுடிகின்றது. "நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாச மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாய் இருப்பதற்கு.... ஆசையாய் தொடருகிறேன்" என்ற அவரது வாஞ்சையே காரணமாகும்! இதுவே பவுல் ஒரு உன்னத கிறிஸ்தவ ஜீவியம் செய்வதற்குரிய இரகசியமாய் இருந்தது.


நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதி ஒரு மனிதன் வெளியரங்கமான பரிசுத்தம் அடைவதற்கு மட்டுமே வழிநடத்த முடிந்தது. வெளியரங்கமான கொலை செய்யாதிருக்க நியாயப்பிரமாணம் நடத்தியது. அதேபோல் வெளியரங்கமான விபச்சாரம் செய்யாதிருக்கவும் நியாயப்பிரமாணம் நடத்தியது. ஆனால் பவுலோ இவைகளில் திருப்தி காணவில்லை. மாறாக, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிற "தேவனுடைய நீதியையே" பெற்றுவிட பவுல் வாஞ்சித்தார். 


இயேசு கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையின் நீதியோ, ஒருவன் தன் உள்ளான அந்தரங்க ஜீவியத்திலேயே விபசாரம் செய்யாதிருக்க வேண்டும்! தன் இருதயத்தில் கோபம் கொள்ளாதிருக்கவும் தன் சிந்தையிலேயே தூய்மையாய் இருப்பதற்கும் புதிய உடன்படிக்கையின் நீதி ஒருவனை நடத்த முடிந்தது. இவ்வாறு தேவனிடமிருந்தே புறப்பட்டுவரும் நீதியை அடைந்துவிடுவதற்கு, பவுல் தீராத தாகம் கொண்டார். இந்த மேன்மையான தேவ நீதியோடு நியாயப்பிரமாணத்தின் நீதியை பவுல் ஒப்பிட்டுப்பார்த்து அவைகளை "வெறும் குப்பை" என மதிப்பிட்டார்! (வசனம் 11) . ஆ, இதுவன்றோ மெய்யான தாகம்!! நம் இருதயத்திலேயே பரிசுத்தத்தை கொண்டுவரும் புதிய உடன்படிக்கையின் நீதியின் மேன்மையைக் கண்டு கொண்டவர்கள் மாத்திரமே பவுலைப்போன்ற தாகம் கொண்டிட முடியும். 


நாம் முதலில் கிறிஸ்துவண்டை வரும்போது நம்முடைய இருதயத்தின் தாகம் ஒரு சிறிய குவளை அளவாகவே இருந்தது. அதை தேவன் நிரப்பினார்! இப்போது நம் இருதயத்தின் அளவு விரிவடைந்து ஒரு 'பக்கெட்' அளவு தாகம் நம்மில் உண்டாகிறது. அதையும் தேவன் நிரப்புகிறார்!! படிப்படியாக.... இத்தாகம் வளர்ந்து, நதியாக ....பல கிளைகள் உள்ள நதியாக தாகம் உண்டாகி....நமக்குள் ஜீவத்தண்ணீர் நதிகள் புரண்டு ஓடிவிடும்!! இவ்வாறு தாகத்தோடு இயேசுவினிடத்தில் வருகின்றவர்களின் ஜீவியம், இயேசு குறிப்பிட்டது போல் "அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்!" என்ற நிலையை அடைந்து விடும் என்பதில் சந்தேகமேயில்லை!!


ஜெபம்:

பரிசுத்த பிதாவே! தேவ பக்தியின் தாகம் பவுலைப்போல் "தீராத வாஞ்சையாய்" இருந்திட கிருபை தாரும்! வாஞ்சையின் அளவு நாளுக்கு நாள் பெருகிட தயைபுரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments