இன்று "அவருடைய" சத்தம்
மே 23
🔸️ தேவனின் வார்த்தையை கேளாமல் பேசும் நம் வார்த்தைகள் வீணானதே! 🔸️
நம் ஆண்டவருக்கு வலிமை கொண்ட சாட்சியாய் நாம் இருக்க வேண்டுமென்றால், அவருடைய பாதத்தில் ஒவ்வொரு நாளும் அமர்ந்து அவரது சத்தத்தை கவனித்து கேட்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும். இன்று பிரசங்கிப்பதற்கு ஆர்வம் கொண்ட அநேகர், அனுதினமும் தேவனுடைய சத்தத்தை கவனித்துக் கேட்கும் பழக்கம் உடையவர்களாக இல்லை! இதனிமித்தம் "கர்த்தருடைய வார்த்தைக்கு" பஞ்சம் உண்டாகி, பிணி உண்டாக்கும் மனுஷருடைய வார்த்தைகளே ஏராளமாய் பெருகி இருக்கும் துயர விளைவு ஏற்பட்டிருக்கிறது. இன்று "கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது" (2 இராஜாக்கள் 3:12) எனக் கூறும் பாக்கிய நிலையை வெகு குறைவான ஊழியர்களே பெற்றிருக்கிறார்கள்.
ஒருவன் முதலாவது "தேவன் என்ன சொல்கிறார்" எனக் கேட்பதற்கு நேரத்தை செலவழிக்காமல், யாதொரு மனிதனுக்கும் தேவனைப்பற்றிய காரியங்களைப் பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை! அது, தனிப்பட்ட சாட்சி சொல்வதாக இருந்தாலும் அல்லது பொதுவான இடங்களில் பேசுவதாக இருந்தாலும், இந்த உரிமை அவனுக்கு இல்லவே இல்லை!
மோசே கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாகச் சென்று, பின்பு "அவன் வெளியே வந்து தனக்கு கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்" (யாத். 34:34) என்றே எழுதப்பட்டிருக்கிறது! யோசுவா கர்த்தருடைய வார்த்தையை இரவும் பகலும் தியானித்தால் மாத்திரமே, அவனுடைய வழிகள் வாய்க்கப் பண்ணப்படும் எனவும் அவனுக்கு தேவனால் கூறப்பட்டது! (யோசுவா 1:3). இவ்விஷயத்தில் சாமுவேலும் நல்ல மாதிரியாய் திகழ்கிறான். அவன் "கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்!" என மிக பொறுமையோடு காத்திருந்து, கர்த்தருடைய வார்த்தையை கேட்டு ஜனங்களிடத்தில் பேசினான்!
ஆண்டவராகிய இயேசுவைக் குறித்து ஏசாயா 50:4-ல் சொல்லப்பட்ட வசனத்தின்படி "காலைதோறும் என்னை எழுப்புகிறார். கற்றுக்கொள்கிறவர்களைப்போல நான் கேட்கும்படி என் செவியை கவனிக்கச் செய்கிறார்" என நாம் வாசிக்கிறோம். இதன் விளைவாய், இந்த வசனம் மேலும் குறிப்பிடுகிறபடி "இளைப்டைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல இயேசு எப்போதும் ஆயத்தமுள்ளவராய் இருந்தார்" என இயேசு பெற்ற பாக்கியத்தை நாம் காண்கிறோம்!!
ஜெபம்:
பரலோக சற்குருவே! நாங்கள் உம் வார்த்தையை கேட்கும்படி உம்மிடம் நெருங்கிச் சேராததாலேயே உம் வார்த்தைக்கு இன்று எங்கள் மூலம் பஞ்சம் உண்டாகிவிட்டது! மனந்திரும்பி வாழ எங்களுக்கு உதவியருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments