Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 26

 இன்று "அவருடைய" சத்தம்


மே 26


🔸️ வாக்குத்தத்தம் சுதந்தரிக்க சோதனைகளில் உறுதியாய் நிற்க வேண்டும்! 🔸️


ஆபிரகாம் கானானை அடைந்தவுடன் கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி "உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன்" என்றார் (ஆதி.12: 5,7). இவ்வாறு செழிப்பான தேசத்திற்கு வந்த பிறகுதான் தேவன் ஆபிரகாமை பரீட்சித்தார்... ஆம், தேவன் ஆபிரகாமை பரீட்சித்தார்!.... அதுபோலவே, தேவன் உங்களையும் என்னையும் பரீட்சிப்பார்!! இந்தமுறை "தேசத்தில் ஏற்பட்ட பஞ்சமே" பரீட்சையாய் இருந்தது (ஆதி.12:10). 


தேவன் உங்களை கானான் தேசத்திற்குள் போகும்படி கூறிவிட்டு, பின்பு அந்த செழிப்பான கானானில் ஒரு பஞ்சம் ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவ்வேளையில் உங்கள் உணர்வின் எண்ணங்கள் சொல்வதை வைத்து ஜீவிப்பீர்களா? அல்லது தேவன் உங்களுக்குத் தம்முடைய ஆவியின் மூலமாய் உங்களுக்குச் சொல்வதைக் கேட்டு ஜீவிப்பீர்களா? இவ்வித சூழ்நிலையில் இயேசு எப்படி இருந்தார் என்பதை கூறும் ஓர் அற்புதமான வசனத்தை கேளுங்கள், "அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும் தமது காது கேட்டபடி தீர்ப்பு செய்யாமலும் இருப்பார்" (ஏசா.11:3,4) என்றே வாசிக்கிறோம். 


ஆனால் மனுஷனோ இயேசு காண்பிக்கும் இந்த வழியின்படி செய்வதில்லை! "கானானில் பஞ்சம்" என நம் செவியினால் கேள்விப்பட்டவுடன் அல்லது அதைக் கண்டவுடன் நம்முடைய கண்களும் நம்முடைய காதுகளும் என்ன சொன்னதோ, அதை வைத்தே நம் சாமர்த்திய மூளையினால் உடனடியாக ஒரு தீர்மானத்தை எடுத்து விடுகிறோம். ஆம், நாம் உடனடியாக "கானான் இப்போது வசிக்கத் தகுந்த ஒரு இடம் இல்லை!" என்றே தீர்மானித்துவிடுகிறோம். அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறோம். இவ்வாறு நம்முடைய சொந்த உணர்வுகளை வைத்தே நாம் ஜீவிக்கிறபடியால் தேவனை ஆலோசிப்பது இல்லை. நம்மைப் போலவே தான் ஆபிரகாமும் செய்தார். "ஆபிராம் எகிப்து தேசத்தில் தங்கும்படி அவ்விடத்திற்கு போனான்" (ஆதி.12:10). அவனை எகிப்திற்கு போகும்படி கூறியது யார்? தேவனல்ல....அவனுடைய உணர்வுகளே அவ்வாறு கூறியது! 


ஒரு மனிதனை பஞ்சக் காலத்திலும் பாதுகாத்துக்கொள்ள தேவனால் முடியாதா? நிச்சயமாய் முடியும். "கர்த்தரைத் தன் நம்பிக்கையாய்க் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் மழை தாழ்ச்சியான பஞ்ச வருஷத்திலும் வருத்தமின்றி தப்பாமல் கனி கொடுக்கின்ற மரத்தைப்போலிருப்பான்" (எரேமியா 17:7,8) என்றல்லவா வேதம் கூறுகிறது. ஆகவே கர்த்தர் மீது நம்பிக்கை கொண்ட மனுஷன் தேவன் சொல்லும்வரை "கனி

கொடுக்கும் மரம்போல்" தன்னுடைய இடத்தை விட்டு ஒருபோதும் அசைய மாட்டான்!!


ஜெபம்:

பரலோகப் பிதாவே! நீர் நடத்தும் வாக்குதத்தத்தை எத்துன்பத்திலும் உறுதியாய் விசுவாசத்தில் நின்று சுதந்தரித்திட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments