இன்று "அவருடைய" சத்தம்
மே 31
🔸️ "பூரண அன்போடு" ஒருவரையொருவர் அன்பு கூர்ந்திட வேண்டும்! 🔸️
பூரண அன்பினால் நிறைவதற்கு நாடாத பட்சத்தில், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லும் பகுதியை சிறப்பாய் செய்திட ஒருக்காலும் முடியாது. ரோமர் 15:14 குறிப்பிடுகிறபடி, "நற்குணத்தினால் நிறைந்தவர்கள் மாத்திரமே..... ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல வல்லவர்களாகிட" முடியும்! ஏனென்றால், ஓர் அன்பின் இருதயத்திலிருந்துதான் "மெய்யான புத்திமதி" புறப்பட்டு வருகிறது. நாம் முதலாவது அன்பை நாடின பிறகுதான் தீர்க்கதரிசனமான புத்தி சொல்ல விரும்ப வேண்டுமென வாசிக்கிறோம் (1கொரி.14:1,3).
திவ்வியமான அன்பே ஆவியின் கனியாக இருக்கிறது! சபைக்கு "மனுஷீக அன்பு" எந்தப் பிரயோஜனமுமில்லை. திவ்விய அன்பில் நாம் பங்கு பெற விரும்புகிறவர்களாக இருந்தால், இந்த 'மனுஷீகம்' மரணத்திற்குள் ஊற்றப்பட வேண்டும். 'பரிசுத்த ஆவியானவரே' நம் இருதயங்களில் தேவ அன்பை ஊற்றுகிறார் (ரோமர் 5:5). நாம் திராட்சைச் செடியில் நிலைத்திருந்தால் மாத்திரமே, அதன் சாரமாகிய பரிசுத்த ஆவி நமக்குள் பாய்ந்து, தேவனுக்கு மகிமையாக கனி கொடுத்திட முடியும்.
சபையில் இருக்கும் நாம், தேவனுடைய உயர்ந்த மேன்மைக்கு குறைவான யாதொன்றிலும் திருப்தி காணவே கூடாது! ஏனெனில், நமக்காக கொண்ட தேவனுடைய சித்தம் "பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறதுபோல நாமும் ஒருமைப்பாட்டில் தேறினவர்களாய் இருக்க வேண்டும்" என்ற ஆதங்கமாகவே இருக்கிறது (யோவான் 17:21-23).
தங்களை விசுவாசிகள் என்று அழைத்துக்கொண்டு, தாங்கள் 'ஏற்கனவே' உயர்ந்த அன்பில் வாழ்வதாக தேங்கி விட்டவர்களின் ஜீவியத்தோடு நம்மை ஒருபோதும் ஒப்பிட்டு பார்த்துவிடக் கூடாது. நாமோ, தேவன் காண்பிக்கும் தரத்தோடு மாத்திரமே நம்மை எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். ஆம், நாம் அன்பில் பூரணம் அடைய வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது!
இயேசு நம்மை அன்புகூர்ந்ததுபோலவே நாமும் ஒருவரை ஒருவர் அன்புகூர்ந்தால், அவர் ஒளியில் இருக்கிறதுபோல, நாமும் ஒளியில் நடந்து ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருக்க முடியும். அப்போது, சபையாய் இருக்கும் நம் நடுவிலிருந்து பிரகாசமான வெளிச்சம் ஒளி வீசிவிடும்! இவ்வாறாக, தேவன் விரும்புகின்ற விளக்குத்தண்டாய் நாம் மாறி, எரிந்து பிரகாசித்து, நம்மைச் சுற்றியுள்ள இருளின் அந்தரங்கங்களை வெளியரங்கத்தில் கொண்டுவரும் சபையாய் மாறிவிடுவோம்!! (மாற்கு 4:21,22; எபேசியர் 5:11).
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே! உமது தெய்வீக பூரண அன்பினால் எங்கள் உள்ளங்களை நிரப்பும்! அந்த அன்பில் சிறிதும் குறை இருக்க வேண்டாம்! அன்பின் குடும்பமாய் நாங்கள் கட்டப்பட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments