Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 02

 இன்று "அவருடைய" சத்தம்


மே 2


🔸️ எங்கள் சரீரம் உமக்கு உகந்த பலியாகட்டும்! 🔸️


தேவனுடைய சத்திய வசனத்தை "இஸ்ரவேலின் ஆசாரியர்கள்" தரம் குறைய பண்ணியதினிமித்தம், கர்த்தருடைய உடன்படிக்கையை கெடுத்துப்போட்டார்கள் (மல்கியா 2:1-9). யூதா தன் சகோதரர்களோடு மோசமாய் நடந்தும், தங்கள் மனைவிகளுக்கு துரோகம் செய்தும், கர்த்தருடைய நேர்மையான வழியை பரிசுத்தக் குலைச்சல் ஆக்கினார்கள் (மல்கியா 2:10-17). இவ்வாறாகவே, கிட்டத்தட்ட நாம் கேள்விப்படுகிற எல்லா விசுவாசிகளின் குழுக்களுமே, ஒருவருக்கொருவர் புறங்கூறுவதும், கோள் சொல்வதும் அவர்களிடம் சர்வசாதாரணமாகிவிட்டது.


சிந்தை வாழ்வில் தங்கள் மனைவிக்கு உண்மையாய் இருக்கிறோம் என்று சாட்சி சொல்லக் கூடியவர்கள் எத்தனை கொஞ்சம் பேர்!! இப்படிப்பட்ட அருவருப்புகள் இன்னமும் இருதயத்தில் இருக்குமென்றால், சுவிசேஷ ஊழியத்தினாலோ, "முழுநேர ஊழியத்தினாலோ" என்ன பிரயோஜனம்? "உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்திற்கு?" என்றல்லவா கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 1:11). மேலும், "உங்களின் விசேஷித்த நாட்களாகிய உபவாச ஜெபங்களும், பக்திக்கூட்டங்களும் சரியான பித்தலாட்டம் (வசனம் 15). இவைகளை நான் வெறுக்கிறேன்... உங்களை கழுவிச் சுத்திகரியுங்கள். தீமை செய்தலை விட்டு ஓயுங்கள்!" (வசனம் 16) என்பதுதான் இன்றும் ஆண்டவருடைய அறைகூவலாக இருக்கிறது.


சேனைகளின் கர்த்தருடைய தூதனாய் வந்த இயேசு, சபையைச் சுத்திகரிக்கும்படி, "புடமிடுகிறவனுடைய அக்கினியைப்" போலவே வந்தார்! (மல். 3:1-3). நம்முடைய காணிக்கைகள் நீதி உள்ளதாய் இருக்கும்படி, அவர் தன் வசனத்தின் மூலமாகவும், பரிசுத்தாவியின் மூலமாகவும் வெள்ளியும் பொன்னும் புடமிட்டுச் சுத்திகரிக்கப்படுவது போல தன் அக்கினியால் நம்மை சுத்திகரிக்க விரும்புகிறார். ஆகவே இன்றைக்கு தேவன் நம்மிடம் காணிக்கையாய் விரும்பும் பலி "நம்முடைய சரீரமே" ஆகும் (ரோமர் 12:1). ஆம், அது ஒன்றே அவருக்குப் பிரியமான பலியாகும்! இதன் பொருள் என்ன? நாம் நம்மை கிறிஸ்துவோடு சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்து, நம்முடைய அவயவங்கள் இனி ஒருபோதும் பாவத்திற்கு அடிமையாய் இல்லாமல், பாவத்திற்கு மரித்து நீதிக்கு அடிமையாய் இருக்கும்படி அவரோடு உயிர்த்தெழுவதாகும்!!


இந்த நம் சரீரத்திலே நம்முடைய சிலுவையை அனுதினமும் சுமந்து நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டியவர்களாய் இருக்கிறோம்!!


 ஜெபம்:

பரம தகப்பனே! யாதொன்றைக் கொடுத்தும் உம்மைப் பிரியப்படுத்த இயலாது என்பதை அறிந்தேன்! என் சரீரமே..... அக்கினியினால் சுத்திகரிக்கப்பட்ட ஜீவியமே உமக்கு உகந்த பலியாகட்டும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments