இன்று "அவருடைய" சத்தம்
மே 10
🔸️ பாவ தோல்வியில் வடித்த கண்ணீருக்கு பலன் உண்டு! 🔸️
நாம் எந்தப் பாவங்களுக்காக துயரம் கொள்கிறோமோ அந்த பாவத்தின் மீது நாம் நிச்சயமாய் ஜெயமும் பெற்றுவிடுவோம். "பாவத்தை நான் ஜெயித்து வாழ முடியவில்லை!" எனக்கூறும் சகோதரனே, நீங்கள் அசுத்த சிந்தைகளால் தோற்கடிக்கப்பட்டு படுக்கைக்கு சென்றபோது, துயரத்தின் மிகுதியால் நீங்கள் உங்கள் தலையணையை கண்ணீரினால் நனைத்ததுண்டோ? இவ்வித துயரத்தை நீங்கள் அடையாமல் "நான் இன்னமும் பாவத்தை ஜெயிக்க முடியவில்லையே" என நீங்கள் கூறுவதில் எவ்விதப் பொருளும் இல்லை. பாவத்தினால் ஏற்பட்ட தோல்விக்காக துயரப்படுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் பலத்த அரணைப்போல் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, அவர்களைத் தாக்கும் குறிப்பிட்ட பாவத்தை ஜெயிப்பதற்கும் நிச்சயம் உதவி செய்வார். இவ்வாறு யாரெல்லாம், மனுஷர்களிடம் நற்சாட்சிபெற்ற தங்கள் வெளிப்புற ஜீவியத்தில் திருப்தி கொள்ளாமல், தேவன் மாத்திரமே காணும் தங்கள் அந்தரங்க ஜீவியத்தின் தோல்விகளுக்காக துயரம் கொள்கிறார்களோ, அவர்களே மெய்யான தெய்வபயம் கொண்டவர்கள். தங்கள் அந்தரங்க ஜீவியத்தின் தோல்வி, தேவனை கனவீனப்படுத்திவிடும் என துயரப்பட்டு வாழும் இவர்களே தங்கள் ஜீவியத்தில் தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டுமென்ற சீரிய நோக்கத்தை கொண்டவர்களாய் இருப்பார்கள்.
இவ்வாறு தங்கள் தனிப்பட்ட ஜீவியத்தில் தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்ற கரிசனையோடு வாழ்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ச்சி அடைந்து. . .தேவனுடைய நாமம் தங்கள் தேசத்தில் கனவீனப்படுகிறதே என்ற துயரம் கொள்ளும் உயர்ந்த நிலைக்கு வழிநடத்தப்படுவார்கள்!
தன் அந்தரங்க ஜீவியத்தில் பிதாவை மகிமைப்படுத்திய இயேசு, எருசலேம் நகரத்தில் தேவனுடைய நாமம் கனவீனம் அடைந்ததற்காக கண்ணீர் விட்டார்! இயேசுவைப்போல் வளர்ச்சியடைபவர்களும், தங்கள் தேசத்தில் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுவதின் நிமித்தம் வியாகுலமடைந்து கண்ணீரோடு ஜெபிப்பவர்களாய் மாறிவிடுவார்கள். எப்படியாகிலும் தேவனுடைய நாமம் தங்கள் தேசத்தில் மகிமைப்படுவதைக் காண்பதற்கு இவர்களின் உள்ளம் அவ்வளவாய் இயேசுவைப்போல் தவித்து நிற்கும்! இவ்வித உயர்ந்த நிலைக்கு இன்று அநேகர் இன்னமும் நம் மத்தியில் எழும்பவில்லை!!
ஜெபம்:
அன்பின் பிதாவே! எங்கள் பாவ-
தோல்வியில் இயேசுவைப்போல் கண்ணீர் விட்டு ஜெபிக்காத எங்கள் மெத்தனத்தை மன்னியும்! கண்ணீரோடு ஜெபித்து, பாவத்தை ஜெயித்து வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments