Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 14

 இன்று "அவருடைய" சத்தம்


மே 14


🔸️ எந்த சூழ்நிலையிலும் ஸ்தோத்திரம் நிறைந்த வாழ்க்கை வேண்டும்! 🔸️


ஒரு திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்த பவுல் "நான் எந்த நிலைமையில் இருந்தாலும், மனரம்மியமாயிருக்க கற்றுக் கொண்டேன்" (பிலிப்பியர் 4:11) எனக் கூறினார். ஆம், இதுபோன்ற திருப்தியான ஜீவியம் தன்னோடுகூட எப்போதும் நிறைவான சந்தோஷத்தையும், சமாதானத்தையும் நிச்சயமாய் கொண்டுவரும்!! போதுமென்ற திருப்தியில் வாழ்ந்த பவுல், அது அளித்த சந்தோஷத்தையும், சமாதானத்தையும், தான் நிறைவாய் அடைந்திருப்பதாகவே 4ம் 7-ம் வசனங்களில் குறிப்பிட்டார். 


இவ்வித திருப்தியான வாழ்க்கையை கண்டவர்கள் மாத்திரமே, தேவன் தங்களோடு இடைபடும் எல்லா சூழ்நிலைகளுக்காகவும் ஸ்தோத்திரம் செலுத்திடவும் முடியும்! மேலும் தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒவ்வொன்றையும் தங்களுடைய நன்மைக்காகவே கிரியை செய்திடும் தேவனுடைய சர்வ வல்லமையை விசுவாசிப்பவர்கள் மாத்திரமே, எந்த சூழ்நிலைகளிலும் மனதிருப்தியாக இருப்பார்கள்! இவர்கள் மாத்திரமே, ஆபகூக் போல, தங்கள் தோட்டத்தில் விளைச்சல் இல்லாது போனாலும் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பார்கள்! அல்லது, தங்களுடைய ஆட்டு மந்தையில் ஒரு சில ஆடுகள் மரித்துப்போனாலும் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பார்கள்! அல்லது அதிகமான பொருளாதார நஷ்டம் ஏற்பட்டாலும், இன்னும் இதுபோன்ற 'எந்த' சூழ்நிலையானாலும் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பார்கள்!! (ஆபகூக் 3:17,18).


பரிசுத்த ஆவியினால் எப்போதும் நிறைந்திருக்கும் ஒருவனின் இருதயம் மாத்திரமே, கர்த்தரைத் துதிக்கும் ஸ்தோத்திரத்தினால் வழிந்தோடும் என எபேசியர் 5:18- 20 வசனங்கள் நமக்குப் போதிக்கின்றன. சிறைச்சாலையில் தன்னுடைய கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்டு இருந்தபோதுகூட, அப்போஸ்தலனாகிய பவுல் தேவனை முழு மனதாய் துதித்திட முடிந்தது (அப். 16:25). அக்கொடிய சூழ்நிலையிலும், யாதொன்றைக் குறித்த குறை சொல்லுதலும் இல்லாமல் "பூரண திருப்தி கொண்டவராகவே" பவுல் இருந்ததை நாம் காண்கிறோம்.


ஒரு கிறிஸ்தவனிடத்தில் முறுமுறுக்கும் ஜீவியம் காணப்பட்டால், அவன் ஆவியில் நிறைந்து வாழும் ஜீவியம் கொண்டவன் அல்லவே அல்ல! அப்படிப்பட்டவர்கள் வனாந்தரத்தில் தேவனுக்கு முன்பாக முறுமுறுத்த இஸ்ரவேலர்களைப் போல் இருக்கிறபடியால், இன்னமும் வாக்குத்தத்தமாகிய ஜெய வாழ்க்கைக்குள் பிரவேசிக்க முடியாதவர்களாகவே தேங்கி நின்று விடுகிறார்கள்!!


ஜெபம்:

பரம தந்தையே! வெவ்வேறான சூழ்நிலைகளில், ஸ்தோத்திரத்தோடே கூடிய திருப்தியான வாழ்க்கையை நாங்கள் கற்றுக்கொள்ள உதவி புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments