இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 5
🔸️ யாதொருவர் மீதும் சமாதானம் இழந்திடக் கூடாது! 🔸️
இந்த மனிதனிடம் யார் எவ்வளவு முயற்சித்தாலும் அவனிடம் வாக்குவாதத்தைக் காணவே முடியாது என்ற நல்ல சாட்சியையே ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் பெற்றிருக்க வேண்டும்.
"நான் என்னைப் பொறுத்தமட்டில் எல்லோரோடும் சமாதானமாய் இருந்திடமுடியும்" என்பதே ரோமர் 12:18-ன் செய்தியாகும். சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படும் என்றால் அதற்கு ஒரே காரணம்....இன்னொருவருடைய குறையாக மாத்திரமே இருக்க வேண்டும்! இவ்வித நிலையில் இவ்வுலகத்தில் உள்ள எந்த மானிடனிடத்திலும் நாம் சமாதானமாய் வாழ்ந்திட நிச்சயமாய் முடியும்!
சமாதானமாய் இருக்க வேண்டும் என்பதற்குப் பொருள் எல்லோரிடமும் ஒத்துப்போக வேண்டும் என்பதல்ல. யாவரோடும் சமாதானமாய் இருக்க நாம் அழைக்கப்பட்டிருந்தும், சிலர் சத்தியத்தில் முரண்பாடாக நிற்கும்போது நாம் அவர்களோடு ஒத்துப்போய் சமாதானமாக இருக்க முடிவதில்லை என்பது ஒரு வருத்தமிகு உண்மையேயாகும். நாம் சத்தியத்திற்காக உறுதியுடன் நிற்க வேண்டியது உண்மைதான். ஆகிலும் நாம் அதற்காக ஒருபோதும் வாக்குவாதம் செய்யவோ, சண்டையிடவோ கூடாது. இதை 2 தீமோத்தேயு 2:24-26 வசனங்கள் தெளிவுபட கூறுகிறது. "கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும்...... எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி...... சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்" என வாசிக்கிறோம். எனவே நாம் சத்தியத்திற்காக உறுதிபூண்டு நிற்கும் அதேவேளையில், இன்று அநேகர் செய்வதுபோல வாக்குவாதமும், சண்டையுமிட்டு சாதிப்பதற்கு நாம் ஒருபோதும் முயலக்கூடாது. கிருபை பொருந்தியவர்களாய், சாந்தத்தோடுதான் சத்தியத்திற்காக நிற்கவேண்டும்!
இயேசு கிறிஸ்துவினிடத்தில் காணப்பட்ட தேவ மகிமை "சத்தியத்தினால் நிறைந்தவராய்" என்று மாத்திரம் காணப்படாமல் "கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்" (யோவான் 1:14) என்றே நாம் இயேசுவின் மகிமையைக் காண்கிறோம். ஆகவே நம்மைப் பொறுத்தவரையில் நாம் எப்போதுமே சமாதானமாய் இருப்பது சாத்தியமே ஆகும்!
ஜெபம்:
பரம பிதாவே! என் சமாதானம் பிறரை சார்ந்தது அல்ல என உணர்த்தி, என்றென்றும் பிறரிடம் சமாதானம் கொண்டு வாழ வழிநடத்தும் உம் போதனைக்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments