இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 10
🔸️ பிறர் கண்களுக்கு முன்பாக 'சிறியராய்' இருந்தே ஜீவித்திட வேண்டும்! 🔸️
நாம் மற்றவர்களிடம் எவ்வாறு பழகி நடந்து கொள்கிறோம் என்பதை தேவன் கவனித்து பார்க்கிறார்! "தெய்வ அன்பு, பிறரை சிறியவர்களாக எண்ணும்படி ஒருக்காலும் செய்யாது!" ஊழியத்திலும் இவ்வாறே நாம் செய்துவிட முடியும். நம் ஊழியம் வல்லமை நிறைந்ததாய், அநேகரை ஆசீர்வதிப்பதாக இருந்துவிட்டால்......அந்த ஜனங்களிடம் நாம் சுலபமாக ஆதிக்கம் பெற்றுவிட முடியும்! அந்த மரியாதையைப் பயன்படுத்தி, அவர்கள் எனக்கு ஏதாகிலும் ஒருவிதத்தில் எனக்குப் பணிவிடை செய்திட சுலபமாய் அவர்களைக் கையாண்டிட முடியும்! அப்படி நான் செய்துவிட்டால், அவர்களுக்கு நான் பெரியவனாய் மாறிவிடுவேன். இவ்வித நிலைக்குத்தான் நான் அதிகம் பயப்படுவதுண்டு. நானோ, தாழ இறங்கி, சிறியவனாகவே இருந்து "பிறருக்கே பணிவிடை செய்திட" விரும்புகிறேன். ஏனென்றால், நான் "ஊழியம் செய்திடவே" அழைக்கப்பட்டவன்!!
"மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல் தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்" எனக் கூறும் ரோமர் 12:16-ம் வசனத்தைப் பாருங்கள். தாழ்மை உள்ளவர்களோடு நாம் பழகி ஐக்கியம் கொள்வதையே வேதம் போற்றியுரைக்கிறது. அதாவது, நான் ஒரு சாதாரண மனுஷனாய் இருந்து, சாதாரண ஜனங்களோடு, அந்நியோன்யமாக இருந்திடும் ஐக்கியம்! இயேசு தனக்கென "ஒரு பட்டத்தை" வைத்து அழைத்துக் கொண்டதை நான் மிகவும் நேசிக்கிறேன்! அவர் சொன்னார் "நான் மனுஷகுமாரன்!" அதாவது நான் ஒரு சாதாரண மனிதன்!!
அவர் என்ன நிஜத்தில் சாதாரண மனிதரா? அல்லவே அல்ல. அவர் தேவன்.... சர்வவல்ல தேவன்! ஆனால் பூமியிலோ ஒரு சாதாரண மனிதனாகவே ஜீவித்தார்.
எனக்கு யாதொரு வரம் இல்லாவிட்டாலும், என்னால் சரியாகக்கூட பிரசங்கிக்கத் தெரியாவிட்டாலும், நான் ஒரு சாதாரண மனுஷனாய் இருந்துவிட்டால், நான் நிச்சயமாய் "அவரைப்போல்" மாறிட முடியும்!
ஜெபம்:
அன்பின் தகப்பனே! எங்கள் எஜமானின் சாயல், ஊழியம் செய்திடும் எளிய மானிடனின் சாயல்! அவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இயேசுவைப்போல் மாறிட உதவி செய்தருளும்; ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments