Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 11

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 11


🔸️ தேவனே நம் எஜமான், அவரது அங்கீகாரமே நாடவேண்டும்! 🔸️


"தேவரீர் நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக் கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்" என்று தேவனுடைய மறைத்துக்கொள்ளும் சுபாவத்தை ஏசாயா 45:15 கூறுகிறது. நான் எவ்வளவு அதிகம் தேவனைப்போல் மாறி இருக்கிறேனோ, அவ்வளவுக்கதிகம் என்னை நானே மறைத்துக் கொள்பவனாய் இருப்பேன்! சர்வலோகத்தையும் தேவன் நேர்த்தியாய் சிருஷ்டித்து இருந்தபோதும், அதை காணும் ஒரு நாத்திகன் "தேவன் இல்லை!" என்று பகிரங்கமாய் கூறுகிறான். அந்த அளவிற்கு, தேவன் தன்னை மறைத்துக் கொள்கிறார்!! 


அதுபோலவே விசுவாசிகளின் ஜெபத்திற்கு தேவன் நேர்த்தியாய் பதில் செய்த போதிலும், அந்த விசுவாசிகளோ "இந்த ஆஸ்பத்திரியில்தான் நான் சுகமானேன்" என்றோ "இந்த மருந்துதான் என்னை குணப்படுத்தியது" என்றோ கூறிவிடுகிறார்கள். இவ்வாறு ஒரு மருத்துவரோ, மருந்துகளோ போன்ற மற்றவைகளே தங்களுக்கென மகிமையைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் தேவன் தான் எல்லாவற்றையும் செய்தார்.... இருப்பினும், அவரோ தன்னை ஒளித்துக் கொண்டார்!   


இந்திய தேசத்திலுள்ள வீடுகளில் பணிபுரியும் வேலைக்காரர்களை நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள்தான் துணிகளைத் துவைப்பார்கள். ஒரு விருந்தாளி வீட்டிற்கு வரும்பொழுது துணிகள் துவைத்து மடித்து வைக்கப்பட்டிருக்கும். சமைத்த உணவு மேஜையில் இருக்கும். வீடு சுத்தமாக பெருக்கப்பட்டிருக்கும்..... ஆனால், இத்தனை வேலைகளையும் செய்த வேலைக்காரரையோ உங்களால் அங்கு பார்க்க முடியாது!! 


இதைக் குறித்து நான் தியானித்து "ஆண்டவரே, நான் ஒரு ஜெயமுள்ள தேவனுடைய ஊழியனாக இருக்க வேண்டுமென்றால், இந்த வேலைக்காரரைப் போலத்தான் நானும் இருக்க வேண்டும்! எல்லாவற்றையும் செய்து முடித்து, என்னை மறைத்துக்கொள்ள அருள்புரியும்!! என்றே ஜெபிக்கிறேன். தான் வேலை செய்து அதன் பலனைப் பெற்ற 'விருந்தினரைக்' குறித்து வேலைக்காரருக்கு யாதொரு சஞ்சலமும் இருப்பதில்லை. அவர்களின் எஜமான் தரும் சம்பளமே அந்த வேலைக்காரருக்குப் போதும்! அதுபோலவே என் எஜமானாகிய தேவன் எனக்கு வழங்கும் "அங்கீகாரம்" எனக்கு கிடைத்தால் அது போதும்!! நான் என்ன செய்கிறேன் என்பதை இந்த பூமியிலுள்ள வேறு யார் அறிந்திட நான் விரும்ப வேண்டும்? ஓர் ஆத்தும ஆதாயம் செய்கிற ஊழியமோ அல்லது வேறு எந்த ஊழியமோ நான் செய்தாலும்..... என் எஜமான் வழங்கிடும் அங்கீகாரத்தில் மாத்திரமே நான் மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறதா? என்பதே காரியமாகும்.


ஜெபம்:

பரமபிதாவே! 'சகலமும்' படைத்த நீர் மறைந்து நிற்பதுபோல், நாங்களும் எதைச் செய்தாலும் உம்மைப்போல் மறைந்து, உமது அங்கீகாரம் ஒன்றே தேடிட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments