Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 09

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 9


🔸️ நம் ஜீவியம் கிறிஸ்துவுக்கு சுகந்த வாசனையாய் இருந்திட வேண்டும்! 🔸️


2 கொரிந்தியர் 2:14-ம் வசனம் கூறுவதைக் கவனியுங்கள்: "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." பார்த்தீர்களா, நமக்குள்ளிருக்கும் கிறிஸ்துவை மற்றவர்கள் உணரும்படிச் செய்யும் "ஒரு வாசனை" நம்மிலிருந்து வெளிப்படுவதாக இங்கு பவுல் குறிப்பிடுகிறார். நாம் பேசும் யாதொன்றைக் குறித்தோ அல்லது நாம் செய்திடும் யாதொன்றைக் குறித்தோ இங்கு குறிப்பிடவில்லை. அது "வாசனை" மட்டுமேயாகும்! இந்த 'வாசனை' நாம் உபயோகிக்கும் "ஒரு வாசனை திரவியதிற்கு" ஒப்பானதேயாகும். 


வாசனை திரவியத்தை உபயோகிப்பவர், யாதொன்றும் அது குறித்து கூற வேண்டியதில்லை!... வாசனை தானாகவே வெளிப்பட்டுவிடும்!! அவர் பழகும் விதம், உங்களிடம் அவர் பேசும் தன்மை, அவரிடம் நெருங்கிப் பழகிட தூண்டும் குணம் ....ஆகிய யாவற்றிலும் பிரதிபலிக்கும் "ஏதோ ஒன்று" நிச்சயமாக இருக்கிறது. இவ்வாறு 'சொல்லப்படாத" அனேக குணநலன்கள் உண்டு..... அவைகளில், 'ஒரு வாசனையை' மாத்திரமே நம்மால் முகர முடிகிறது!!


2 கொரிந்தியர் 2:15-ம் வசனம் தொடர்ந்து கூறுகையில், "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்கு கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்!!" என்றும் கூறுவதைப் பாருங்கள். இந்த வசனம் நமக்கு கூறும் விடுதலையான செய்தி என்னவெனில், "நாம் ஜனங்களுக்கு சுகந்த வாசனையாய் இருப்பதற்கென முயற்சித்துவிடக் கூடாது" என்பதுதான். ஆனால், இதுபோன்ற செய்தியை கேட்கும் அநேகர் உடனடியாக "சரிதான், இன்றிலிருந்து நான் மற்ற ஜனங்களுக்கு சுகந்த வாசனையாய் இருக்கப் போகிறேன்" எனக் கூறுகிறார்கள். ஆனால், இதுபோன்ற முயற்சி அனைத்தும் செயற்கையானதே ஆகும்.  


உண்மையில் வசனம் நமக்கு கூறும் புத்திமதி யாதெனில், நாம் முதலாவதாக "தேவனுக்கே" கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆம், முதலாவது தேவன் தான் நமது நற்கந்த சுகந்த வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு தேவனுக்கு நாம் நற்கந்தமாய் இருந்துவிட்டால், மற்ற ஜனங்களும் அந்த நற்கந்த வாசனையை முகர்ந்து விடுவார்கள் என்பது நிச்சயம்! 


ஜெபம்:

பரம சற்குருவே! எங்களின் கேடு நிறைந்த "ஜீவிய வாசனையை" வெறுத்து, உம்மண்டை வருகிறோம்! தயவுடன் எங்களை ஏற்று, கிறிஸ்துவின் சுகந்த வாசனை எம்மில் வீசச் செய்திடும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments