Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 24

இன்று "அவருடைய" சத்தம்

ஜூன் 24

🔸️ 'அடங்கியிருக்கும் ஆவி' கொண்ட மனைவியே தன் குடும்பத்தை கட்டுவாள்! 🔸️

குடும்பத்திலுள்ள மனைவியர்கள் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் திடன் கொண்ட மனைவியராய் மாற விரும்பினால், "அடங்கியிருக்கும் ஆவியை" எல்லாச் சூழ்நிலைகளிலும் பெற்றுக் கொள்ளும்படி நாட வேண்டும். தனக்கு தரப்பட்ட ஆளுகைக்கு அடங்கியிருக்கும் ஆவி கிறிஸ்துவின் ஆவியே ஆகும். இதைத்தான் I பேதுரு 3:1-ல் 

"அந்தப்படி (இயேசுவைப் போலவே) மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; இவ்வாறு அடங்கி கீழ்படிந்திருப்பதில் வல்லமை இருக்கிறபடியால், உங்கள் புருஷர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்தாலும், அப்படிப்பட்டவர்களுக்கும் எப்போதும் அடங்கியிருங்கள்" எனக் கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.  

"புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்" (நீதி.14:1). இந்த வசனத்தில் புத்தியுள்ள கணவன் என்று எழுதப்படவில்லையே!

ஏனென்றால் ஒரு மனைவி அடங்கியிருக்கும் ஆவியை பெற்றிருப்பாளா? அல்லது பெற்றிருக்க மாட்டாளா? என்பதை வைத்தே வீடு கட்டபடுவது நிர்ணயிக்கப்படுகிறது!

தன் வீட்டில் தேவனுடைய பிரதிநிதியாய் இருக்கும் தன் கணவனின் ஆளுகைக்கு விரோதமாய் ஒரு ஸ்திரீ முரட்டாட்ட ஆவியைக் கொண்டிருந்தால், அவள் உண்மையில் தன் சொந்த வீட்டையே இடித்து போடுகிறவள். இது போன்றவளை "புத்தியில்லாத அல்லது பைத்தியம் போன்ற ஸ்திரீ" எனக் கூறுவதில் எவ்வித பிழையுமில்லை. ஏனெனில், இவள் தன் வீட்டு ஜன்னல்களையும், சுவர்களையும் ஒரு பைத்தியத்தை போல் உடைத்து இடித்துக் கொண்டிருக்கிறாள்!

ஞானமுள்ள "அடங்கியிருக்கும் ஆவியுடைய" மனைவியர் கொண்ட நல்ல பக்தியுள்ள குடும்பங்களாய் திரளான கிறிஸ்தவ குடும்பங்கள் கட்டப்பட தேவன் கிருபை செய்வாராக!    

 ஜெபம்:

அன்புள்ள தந்தையே! மனைவியர்களின் முக்கிய பங்காகிய கணவனுக்கு "அடங்கி இருக்கும்" நல்ல ஆவியை தயவாய் தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்!

 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.

"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".

From:-

https://t.me/hisஇன்று "அவருடைய" சத்தம்

https://t.me/hisvoicetodayvoicetoday

Post a Comment

0 Comments