Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 28

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 28


🔸️ தேவனுடைய ராஜ்யம் வந்திட மெய்யான ஏக்கம் வேண்டும்! 🔸️


"உம்முடைய ராஜ்யம் வருவதாக" என்ற ஜெபத்தை இவ்வுலகத்தின் பொல்லாத தீமைகளைக் கண்டு சலித்தவர்கள் மாத்திரமே ஜெபித்திட முடியும். "நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்" (2 பேதுரு 3:13) என பேதுரு வாஞ்சையோடு கூறினார்.


இன்று இவ்வுலகத்தை நிறைத்திருக்கும் பயங்கர கொடூரத்தையும், (Violence), சீரழிந்திருக்கும் கற்பு ஒழுக்கத்தையும் (Immorality) சற்று ஏறிட்டுப் பாருங்கள். இன்று நாம் செய்தித்தாள்களைப் படிக்கும்போது நம் இருதயத்திலிருந்து, "ஆ, என் பிதாவே! உம்முடைய ராஜ்யம் வருவதாக!! என் தனிப்பட்ட சௌகரிய வாழ்விற்காக உம்முடைய ராஜ்யம் வர நான் விண்ணப்பிக்கவில்லை. மாறாக, வெகு சீக்கிரத்தில் உம்முடைய நீதியின் ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டு, உம்முடைய மகிமைகென்றே படைக்கப்பட்ட இந்த பூமியில் உம்முடைய நாமம் என்றென்றும் மகிமைப்பட்டிட வேண்டும்!" என்ற ஜெபமே புது வெள்ளமெனப் பொங்கி எழுந்திட வேண்டும்! 


"கடைசி நாட்கள் நோவாவின் நாட்களைப்போல் இருக்கும்" என இயேசு கூறினார். அவபக்தி உள்ளவர்கள் நிறைந்த முழு உலகத்திலும், நீதியுள்ள ஒரு தனிமனிதனாக நோவா அன்று காணப்பட்டான். அவன் தன்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் பொல்லாத பாவங்களைக் கண்டு தன் மனதில் வேதனை கொண்டவனாய் நீதியைப் பிரசங்கித்தான்(2 பேதுரு 2:5). இந்த நோவா தன் இருதயத்தின் ஆழத்தில் நீதி வாசம் செய்வதை வாஞ்சிக்கவும், அதைப் பிரசங்கிக்கவும் செய்தான். அன்றிருந்த 'நோவாவின் ஜெபமும்' "உம்முடைய ராஜ்யம் வருவதாக" என்றே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.


இன்று எல்லா விசுவாசிகளுமே, 'கிறிஸ்து சீக்கிரமாக திரும்ப வருவார் என்றும், இப்பூமியில் தன் ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்றும்' கூறத்தான் செய்கிறார்கள். ஆனால், இவ்விதம் அவர்கள் கூறுவதை உண்மையாகவே விசுவாசிக்கிறார்களா என்பதைக் கண்டு கொள்வதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? இங்கு 1 யோவான் 3:3-ல் "அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிற எவனும் அவர் சுத்தம் உள்ளவராயிருப்பதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்கிறான்" என்றே பறைசாற்றுகிறது. ஆகவே, கிறிஸ்து இப்பூமிக்கு திரும்ப வருவார் என உண்மையாகவே ஒருவன் விசுவாசிக்கிறானா என்பதற்கு அத்தாட்சி, "தன் மணவாளனுக்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் ஒரு மணவாட்டியைப்போல் துரிதமாய் ஆயத்தப்படுவதே" அந்த சாட்சியாகும்!  


 ஜெபம்:

பரலோக பிதாவே! சீரழிந்த இன்றைய சமுதாய கேட்டிலிருந்து நாங்கள் விடுதலையாவது மாத்திரமல்ல, இவை அனைத்தையும் மாற்றி, உம்முடைய ராஜ்யம் இந்த பூமியில் வர வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments