Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 06

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 6


🔸️ 'தேவனே எனது விருப்பம்' என வாழ்பவர்களே மாறாத மகிழ்ச்சி கொண்டவர்கள்! 🔸️


தாவீது தன்னுடைய சங்கீதம் 27:4-ம் வசனத்தில் 

"கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்!" எனக் கூறினார்.   


தாவீது ஒரு பேரரசன். எண்ணற்ற யுத்தங்களை வென்றவன். ஆகிலும், "ஆண்டவரே, இவைகளில் நான் திருப்தி அடையவேயில்லை. உம்மிடத்தில் நான் விரும்பிக் கேட்பது ஒன்றே ஒன்றுதான்! அந்த விருப்பம், இந்த முழு உலகத்திற்கும் நான் ராஜாவாய் வரவேண்டும் என்றோ அல்லது நான் புகழ் ஏணி ஏறவேண்டும் என்றோ இல்லை! மாறாக, என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்முடைய மகிமையின் அழகை தரிசித்து இருக்கவேண்டும்!!" என்று கெஞ்சி நின்றான். தாவீதின் இந்த "ஒரே விருப்பமே" நம் ஜீவியத்தின் விருப்பமாயும் இருக்கிறதா?


ஆண்டவரை அதிகமாய் நேசித்த ஒரு ஏழை விதவையைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சிறிய குடிசையில் தன் ஐந்து பிள்ளைகளுடன் அந்த ஏழை விதவை வசித்து வந்தாள். அந்த அம்மாளின் வீட்டிற்கு வந்த ஒருவர் மிகுந்த ஆச்சரியத்துடன், "நீங்கள் நிறைந்த மகிழ்ச்சியோடும், சமாதானத்தோடும் எப்போதும் காணப்படுகிறீர்களே! அது எப்படி? உங்களுக்கோ அதிக பணமும் இல்லை; ஏராளமான உபத்திரவங்கள்தான் உண்டு; உங்கள் பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்; ஆனாலும், அவர்கள் எப்போதுமே சிரித்த முகமாய் இருக்கிறார்கள்; இந்த இனிமையான உங்கள் வாழ்க்கையின் ரகசியம் என்ன?" என்று கேட்டார். இந்த கேள்விக்கு அந்த ஏழை விதவை "ஐயா, இயேசு கிறிஸ்துவே எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்! இந்த உலகத்தில் அவரைத்தவிர எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை!!" என்றே முக மலர்ச்சியுடன் பதில் கூறினார்கள்.


ஆண்டவர் இயேசுவே நமக்கும் 'எல்லாமுமாய்' மாறிவிட்டால், நாமும் அந்த விதவையின் மகிழ்ச்சியில் பிரவேசித்துவிடலாமே!


அதற்கு பதிலாக, ஒரு சிறு துன்பம் ஏற்பட்டவுடன் நாம் குறை சொல்லுவோமென்றால், ஆண்டவர் நமக்கு எல்லாமுமாய் இன்னமும் மாறவில்லை என்பதே உண்மையாகும். இன்றிலிருந்தாவது, ஆண்டவர் இயேசு நமக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் மாறுவாராக! அப்போது மாத்திரமே நாமும் சங்கீதக்காரனைப்போல, "ஆண்டவர் இயேசுவே, இப்பூமியில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பம் ஏதுமில்லை!" என கூறிட முடியும் (சங்கீதம் 73:25).


ஜெபம்:

பரம தந்தையே! நீர் நிறைந்த உள்ளத்தில் துன்பம் சென்று ஆட்கொள்வதில்லை; 'வருவது வரட்டும்' ஆகிலும், 'உம்முடைய மகிழ்ச்சியை அது பறித்திட இயலாது' என வாழ்ந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments