Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 11

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 11


🔸️ வாலிபரே! காலத்தைப் பிரயோஜனப் படுத்துங்கள்! 🔸️


ஆதியாகமம் 43:1,2 வசனங்களில், தேசத்தின் கொடிய பஞ்சத்தினால், தன் குமாரர்கள் எகிப்திற்குச் சென்று தானியம் வாங்கி வரும்படி அவர்களிடம் யாக்கோபு கூறினான். எப்போதெல்லாம் ஒரு பஞ்சம் வருகிறதோ, அப்போதெல்லாம்... பஞ்ச காலத்திற்கு முன்பே ஞானமாய் இருந்தவர்களிடம் சென்றுதான் நீங்கள் உணவு வாங்க வேண்டும்! அந்த முதல் செழிப்பான 7 வருடங்களில் யோசேப்பு ஞானமாய் நடந்து, தானியங்களை சேர்த்து வைத்தான். ஆகவே, தங்கள் செழிப்பின் நாட்களில் சோம்பேறிகளாக இருந்த யாவரும் இப்போது யோசேப்பிடம் வர வேண்டியதாயிருந்தது. "சோம்பேறியே, நீ எறும்பின் இடத்திற்குச் சென்று கற்றுக்கொள்! அது மழைக் காலத்திற்கு முன்பே தனக்கு வேண்டிய உணவுகளை கோடை காலத்தில் எவ்வாறு சேர்த்து வைக்கிறது என்பதைப் பார்" என்றே வேதாகமம் நமக்கு புத்தி சொல்கிறது.


இந்த சத்தியத்தை ஆவிக்குரிய ரீதியாகவும் ஒப்பிட்டுப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் கிடைத்திடும் இந்த வாலிப காலத்தை ஞானமாய் பயன்படுத்தி ஆவிக்குரிய ஐசுவரியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! பின்பு பல வருடங்கள் கழித்து வேதத்தை தியானிக்க அதிக நேரம் இல்லாதபடி வாழ்க்கைப் பிரச்சனை உங்களை சூழ்ந்திடும் வேளையில், உங்களை பாதுகாத்துக் கொள்ளும் தேவையான ஞானத்தை "அப்போது" உங்களுக்கு ஏராளமாய் கிடைத்திடும் பாக்கியத்தைக் காண்பீர்கள். இந்த நல்ல காலத்தில், தேவனுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் சேகரிக்கும் ஞானம் உங்களைப் பூரண திருப்தியாக்குவது மாத்திரமல்லாமல், அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் அளவிற்கு ஏராளம் பெற்றவர்களாய் இருப்பீர்கள்!


இது குறித்து என் சாட்சியை நான் கூற விரும்புகிறேன். இன்று நான் அறிந்திருக்கும் வேதவாக்கியங்கள் அனைத்தும் நான் மனந்திரும்பிய 19 வயது தொடங்கி எனக்குத் திருமணமான 28 வயது வரை உள்ள காலங்களில் நான் ஆராய்ந்து கற்றுக் கொண்டவைகளேயாகும். நான் வேதாகம கல்லூரிக்குச் சென்றதே இல்லை. மாறாக, நான் இந்திய கப்பற்படையில் பணியாற்றிய உபரி நேரத்தில் இயேசுவின் பாதத்தில் அமர்ந்தே வேதவாக்கியங்களை கற்றுக்கொண்டேன். இவ்வாறு வேதவாக்கியங்கள் மீது நான் கொண்ட பழக்கம் ஏராளமான சோதனைகளிலிருந்தும் என்னை விலக்கிக் காத்து கொண்டது. இந்தக் காலமே... அதாவது, திருமணமாகாத வாலிப காலமே எனக்கு ஏராளமான நேரம் கிடைத்த செழிப்பின் காலமாய் இருந்தது.     


 ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! சாதகமான எங்கள் தனிமை காலத்தில், "சோம்பலை உதறி" உம்மையும் உம்முடைய திருவசனத்தையும்... ஏராளம் ஏராளம் பெற்று சேர்த்து வைத்திட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments