Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 18

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 18


🔸️ 'ஆவியில் நிறைந்த' தெய்வ பயம் கொண்ட வாழ்க்கை! 🔸️


'வெளித்தோற்றத்தில்' மிகவும் பரிசுத்தமாய் இருப்பதைப்போல் காணப்படும் அநேகர் "கிறிஸ்துவைப் போல்" இருப்பதில்லை. இந்த வேறுபாட்டை பிரித்துக் காட்டுவது எது தெரியுமா? "தெய்வ பயத்தின் ஆவியே" இந்த வித்தியாசத்தை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. பவுல் தன்னுடைய சாட்சியில், "நான் தேவனுக்கு முன்பாக குற்றமற்ற மனசாட்சியுடன் வாழ்ந்து வருகிறேன்" எனக்கூறினார் (அப்.24:16). ஆனால் இந்த வசனத்தில் அவர் குறிப்பிட்ட குற்றமற்ற வாழ்க்கை நியாயப்பிரமாணத்தில் உள்ள எழுத்தின்படி உண்டானதே ஆகும். எனவேதான், பரிசுத்தாவி அவரிடத்தில் வந்து தங்கியவுடன், எழுத்தின்படி தான் பெற்ற நீதியை இப்போது விரும்பாமல்.... எப்படியாவது, இயேசுவை நெருக்கமாய் அறிந்து, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தின் மூலமாய் வரும் நீதியை அடைவதற்கே வாஞ்சை கொண்டார்! (பிலி. 3:7-9)  


நாம் நல்லது செய்திட எடுக்கும் முயற்சியில்கூட "கிறிஸ்துவைப் போல் இல்லாத" பகுதிகளை பரிசுத்த ஆவியானவர் நமக்கு சுட்டிக்காட்டுவதே அந்த மேன்மையாகும்!!


ஒரு மனுஷனுக்கு முன்பாக நின்றுகொண்டு நீங்கள் செய்யும் வாக்குவாதங்கள் மூலமாய் "நீங்கள் சொல்வதுதான் சரி" என சாதித்து ஜெயித்துவிடலாம். இது போன்றவர்கள், தங்களின் உள்ளான மனப்பான்மையில் "கிறிஸ்துவைப் போல் இல்லாமல்" கறைபட்டிருக்கிறார்கள் என்பதை கண்டித்துக் கூறும் பரிசுத்தாவியின் குரலை கேட்பதற்கு தவறியவர்களாயிருக்கிறார்கள்! எழுத்தின்படி எழுதப்பட்ட கற்பனைகளுக்கும் அதிகமாய் "தேவன் நம்மிடத்தில் பேச விரும்பியதை" கேட்கத் தவறியவர்கள், பரிசுத்தத்தின் பூரணத்தை நோக்கி முன்னேறவில்லை என்பதை அறிந்து கொள்வார்களாக!!


கடைசி நாளின் நியாயத்தீர்ப்பில் தேவன் நம் யாவரையும் நியாயம் தீர்ப்பார் என்ற சத்தியம் நம் யாவருக்குமே தெரியும். ஆனால், அதை அவர் எவ்வாறு நிறைவேற்றுவார்? 1கொரி. 4:5 கூறுகிறபடி, "இருளில் மறைந்திருக்கிறவைகளாகிய நம் இருதயங்களின் யோசனைகளையே (மன நோக்கங்களை)" அவர் நியாயம் தீர்ப்பார்! இந்த வசனத்தை நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், நம் "வாழ்வின் நோக்கம்" முழுவதுமாய் தேவனை மாத்திரமே பிரியப்படுத்தி வாழ்வதாய் மாறிவிடும்! ஆம், ஜனங்கள் நம்மை 'வெளித்தோற்றத்தில்' எப்படி காண்கிறார்கள் அல்லது காணவில்லை என்பதெல்லாம் நமக்கு ஒரு பொருட்டாய் ஒருக்காலும் இருப்பதே இல்லை!! இவ்வித பரிசுத்தத்தின் ஒப்பற்ற பாக்கிய வாழ்வு, "கர்த்தருக்கு பயப்படுகிற ஆவியினால்" நிறைந்து வாழ்கின்ற யாவருக்குமே கைகூடும்!! 


ஜெபம்:

அன்பின் தகப்பனே! வெளித்தோற்ற வாழ்க்கையில் திருப்தி கொள்ளாமல், அந்தரங்க வாழ்க்கையில் கிறிஸ்துவைப் போல் வாழ்ந்திட, உம் தூய ஆவி எங்களுக்குள் ஊற்றும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments