இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 22
🔸️ நம்மை கரம்பிடித்து வழிநடத்த ஆர்வம் கொண்ட தேவன்! 🔸️
காரிருள் சூழ்ந்த ஓர் அடர்ந்த காட்டில் எந்த வழி செல்ல வேண்டும்? என திகைத்து நீங்கள் தனிமையாய் இருந்தால், அது எவ்வளவு பெரிய கஷ்டமான சூழ்நிலை! அவ்வேளையில், அந்த அடர்த்தியான காட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் நன்றாக அறிந்த ஒருவர் உங்களோடு இருந்தால், அது எத்தனை மகிழ்ச்சியுள்ளதாக இருக்கும்!! அவர் எங்கு உங்களை நடத்திச் சென்றாலும், யாதொரு கேள்வியும் கேட்காமல், மிகுந்த மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் அவரை பின்தொடர்ந்து நீங்கள் சென்றுவிடுவீர்கள்.
இனிவரும் எதிர்காலத்தில், இந்த பூமியில் இதுவரையில் நாம் கண்டிராத காரிருளே நம் கண்முன் வர இருக்கிறது! அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் காண முடியவில்லை! இருப்பினும், நாமோ ஒவ்வொரு நாளும் அடியெடுத்து முன் செல்ல வேண்டியதாயும் இருக்கிறது!!
சில சமயங்களில், நான்கு அல்லது ஐந்து சாலைகளின் சந்திப்பில் வந்து நிற்கும் திகைப்பிற்கு நாம் ஆளாகியிருக்கிறோம்! அவ்வேளையில் சரியான முடிவை நாம் எடுக்கவில்லை என்றால், அது மிகக் கேடான விளைவுகளை நமக்கு ஏற்படுத்திவிடும். குறிப்பாய், நம் வேலையைத் தெரிந்து கொள்வதோ அல்லது நம் வாழ்க்கைத் துணையைத் தெரிந்து கொள்வதோ ஆகிய தீர்மானங்கள் நம் முழு எதிர்காலத்தையும் பாதிக்கச் செய்துவிடும்!! இதுபோன்ற சமயத்தில் நாம் எப்படித் தீர்மானம் எடுத்திட வேண்டும்? பாதையில் இருக்கும் அபாயங்கள், சாலைகளில் இருக்கும் ஆபத்தான குண்டு- குழிகள் யாதொன்றும் நமக்குத் தெரிவதில்லை. நம்மை சிக்க வைப்பதற்கென்று சாத்தான் விரித்த கண்ணி வலைகள் எதுவுமே நம் கண்களுக்குத் தெரிவதில்லை. இவ்வளவு கேடான சூழ்நிலையில், நாமோ வாழ்வின் பாதையைத் தீர்மானம் செய்திட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்!
இந்த இக்கட்டான வேளையில், நமக்கு முன் இருக்கும் எதிர்காலத்தை முழுவதுமாய் அறிந்த ஒருவர் நம்மோடு இருப்பது எத்தனை நல்லது என்பது மாத்திரமல்ல... அது நிர்பந்தமான அவசியமாயும் இருக்கிறது! (மத்தேயு 28:20) அவ்வாறு நம்மோடு இருப்பவர், நம் முழு நம்பிக்கைக்குப் பாத்திரராயும் இருக்க வேண்டும்! இத்தகைய முழு நம்பிக்கைக்குரிய நபரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் மாத்திரமே நாம் காண முடிகிறது! நம்மைப் பாதுகாப்பான சிறந்த பாதையில் நடத்திச் செல்வதற்கு மாத்திரமல்ல, அவ்வாறு செய்திட சொல்லொண்ணா ஆர்வம் உடையவராயும் அவர் இருக்கிறார்.
ஜெபம்:
எங்கள் பரலோக தந்தையே! எங்கள் மனது விரும்பும் திசை அல்ல, நீர் நடத்த விரும்பும் திசையில் எங்களை நடத்திச் செல்ல எங்களை முழுவதும் உம்மிடம் அர்ப்பணிக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments