இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 3
🔸️ தேவனுடைய கட்டளைக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிய வேண்டும்! 🔸️
பரலோகத்தில் தேவன் ஏதேனும் ஒரு கட்டளையைப் பிறப்பித்தால், அவைகள் யாவும் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன. அக்கட்டளையை ஏற்றிடும் தேவதூதர்கள் தேவனுக்கு அரைகுறையாய் கீழ்ப்படிவதில்லை. தேவதூதர்களின் கீழ்ப்படிதல் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருந்தது. 'அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமே' என முணுமுணுத்துக்கொண்டு, குறை கூறிக்கொண்டு தூதர்கள் கீழ்ப்படிவதில்லை. எந்த ஒரு தூதனும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை வேறொரு தூதனோடு ஒப்பிட்டுப் பார்த்து, "ஆண்டவரே, நீர் அந்த தூதனுக்கு கொடுத்த பணியைக் காட்டிலும் எனக்கு அதிக கஷ்டமான பணியைத் தந்துவிட்டீரே!" என்று ஒருபோதும் கூறுவதில்லை. ஆனால் இன்று அநேக விசுவாசிகளிடம் "இவ்வளவு அதிகமான தியாகமெல்லாம் நான் எதற்குச் செய்ய வேண்டும்? அவனை அல்லது அவளைக் குறித்த காரியமென்ன?" என்றே முறுமுறுக்கிறார்கள். ஆனால் தூதர்களோ, அவருக்கு கீழ்ப்படியும் தருணத்தை ஓர் அரிய தருணமாகவே எடுத்துக்கொண்டு மகிழ்வுடன் கீழ்ப்படிகிறார்கள்!!
இன்று நாம் இப்பூமியில் தேவசித்தம் செய்து வாழ்வோமென்றால், நாம் விண்ணகத்திற்குள் பிரவேசிக்கும்போது இவ்விதம் வாழ்ந்ததற்காக ஒருபோதும் வருந்தவே மாட்டோம்! அங்கே நம் நல்ல ஆண்டவரை முகமுகமாய் நாம் காணும்பொழுது, "அடடா, நான் என் ஜீவியத்தை இன்னும் அதிகமாய் அவரிடம் அர்பணிக்காமல் போனேனே! இன்னும் அதிகமாய் அவருக்கு முழுமையாய்க் கீழ்படிந்திருக்கலாமே!!" என்றுதான் நமக்கு கூறிட தோன்றும்! இப்பூமியில் தேவனுடைய கற்பனைகளுக்கு உடனடியாகவும், முழுமையாகவும், மகிழ்ச்சியோடும் கீழ்ப்படியாமல் நாம் பரலோகம் செல்லும்போது, அங்கே பரலோகத்தின் இனிமையை முழுமையாய் ருசிக்க முடியாமல் அங்கலாய்த்துத் தவித்து நிற்போம்!
"நீங்கள் இந்த பூமியை விட்டுப் போய்விட்டால் இனிமேல் கிறிஸ்துவுக்காக சிலுவையை சுமக்கும் சந்தர்ப்பம் மீண்டும் ஒருபோதும் கிடைக்காது" என சாது சுந்தர்சிங் அடிக்கடி கூறுவதுண்டு. நாம் ஆண்டவர்மீது கொண்டிருக்கும் அன்பை நிரூபிக்க விரும்பினால், அதை இந்த பூமியில் இப்பொழுதே நாம் நிரூபித்தாக வேண்டும். இந்த அரிய சந்தர்ப்பம் ஒருவனுக்கு மீண்டும் பரலோகத்தில் கிடைக்காது!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! இந்த பூமியில் உமது கட்டளைகளை, சிலுவை சுமப்பதை.... 'இதுவே தருணம்' என மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து உம்மீது கொண்ட எங்கள் அன்பை வெளிப்படுத்த கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments