இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 8
🔸️ நாம் "புறக்கணிக்கப்பட்டாலும்" பிறரை அன்புகூர வேண்டும்! 🔸️
நாம் பல வருடங்களாய் தேவனுக்கு உண்மை உள்ளவர்களாய் ஜீவித்ததினிமித்தம் தேவன் நம்மை சோதிப்பதை அல்லது பரீட்சிப்பதை நிறுத்தி விடுவதே இல்லை! ஆம், இவ்வாறு முடிவுபரியந்தம் தேவனுடைய அன்பில் நிலைத்திருப்பவர்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள்!!
நம் சொந்த சபை விசுவாசிகள் நம்மை புறக்கணிப்பதின் மூலமாயும் தேவன் நம்மை சோதித்திட முடியும்! ஆண்டவராகிய இயேசுவுக்கும் இவ்வாறு நடந்ததாக வேதம் குறிப்பிட்டு, "அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார்; அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவான் 1:11) எனக் கூறுகிறது. இயேசு இந்த பூமியில் கற்றுக்கொண்ட அதே பாடங்களை நாமும் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்களாக இருந்தால், அவர் அனுபவித்தது போலவே நாமும் "புறக்கணிக்கப்படுதலை" அனுபவிக்கும்படி நம்மையும் அவ்வாறு நடத்துவார். அது போன்ற அனுபவத்தை சந்திக்கும்போது, இயேசு செய்ததைப் போலவே நம்முடைய பிரதிபலிப்பும் முற்றிலுமாய் அன்பின் செய்கைகளாகவே இருந்திட வேண்டும்!
ஒரு சபையில் இருந்த வாலிப சகோதரன், தேவனுடைய வார்த்தையில் அதிக வரம் பெற்றவராக இருந்தார்! அதனிமித்தமாய் அந்த சபையில் உள்ள மூத்த சகோதரர்களில் ஒருவர் தன்னைவிட 20 வயது குறைந்த வாலிபனிடமிருந்த 'வார்த்தை வளத்தைக்கண்டு' அந்த வாலிபனின் ஊழியத்தில் பொறாமை கொண்டார்! அதன் விளைவாய், சபையில் அந்த வாலிபன் பிரசங்கிப்பதை தடைசெய்து, கூட்டங்களில் அமைதியாக உட்காரும்படி செய்துவிட்டார். இவ்வாறு சம்பவிப்பதுதான் "புறக்கணிக்கப்படும்" சோதனையாகும். அந்த வாலிபனோ, எந்த முரட்டாட்டமும் செய்யாமல் மூப்பர்களின் அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து அமர்ந்து விட்டார். அதுமாத்திரமல்லாமல், அந்த மூப்பரோடு நல்ல ஐக்கியத்தையும் பாதுகாத்துக் கொண்டார்!! அந்த வாலிபனுக்கு இத்தோடு சோதனை நின்றுவிடவில்லை! முப்பது வருடங்களுக்குப் பின்பு வயதான அந்த நிலையில், தேவன் அவரை "இந்தப் பகுதியில்" மீண்டுமாய் அவரை சோதித்தார்!! ஆம், ஒரு சபையில் அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த சூழ்நிலையை மௌனமாய் ஏற்றுக் கொண்டு, எந்த முரட்டாட்டத்திற்கும் இடங்கொடாமல் அந்த சபையில் தன்னைவிட வயது குறைந்த மூப்பர்களுக்கு அடங்கியிருந்தார்!!
இவ்வாறு, நம் ஜீவியத்தின் முடிவுபரியந்தமும் பல்வேறு வழிகளில் நம் யாவரையும் தேவன் 'தொடர்ச்சியாக' சோதித்தறிகிறார்! நாம் கவனம் கொண்டிருப்போமாக!!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! பிறர் எங்களைத் தள்ளி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எங்கள் செய்கைகள் எப்போதும் அன்பின் செய்கைகளாகவே முடிவுபரியந்தம் இருந்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments