இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 28
🔸️ ஒப்பற்ற சிலுவையின் ஜீவியம்! 🔸️
எவ்வாறு "மரணம்" ஒரு மனிதனை இந்த உலகத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்கிறதோ, அதுபோலவே, சிலுவையை தழுவிக்கொண்ட ஒரு விசுவாசியை "இந்த சிலுவை" கிறிஸ்துவின் இராஜ்ஜியத்திற்கு அவனை எடுத்துச் செல்கிறது (கொலோ.1:13).
கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தை கண்டவன், இந்த உலகத்தை இப்போது ஒரு புதிய வித்தியாசமான பார்வையில் காணத் தொடங்குவான். பணம், உலகப்பொருட்கள், ஜனங்கள் ஆகிய யாவையும் சிலுவையின் வெளிச்சத்திலும், நித்தியத்தின் வெளிச்சத்திலும், கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தின் வெளிச்சத்திலும் இப்போது அவன் காணத் தொடங்குவான். இனியும் ஜனங்களை ஏழை-பணக்காரன் அல்லது பெரியவன்-சிறியவன் அல்லது சமுதாய ஏற்றத்தாழ்வு ஆகிய வித்தியாசத்தில் அவர்களைக் காணமாட்டான்! மாறாக, அவர்கள் யாவரையும் "ஆத்துமாக்களாகக்" கண்டு "அவர்களுக்காகவும் கிறிஸ்து மரித்தார்" என்பதை மாத்திரமே காண்பான் (2 கொரிந்தியர் 5:16).
இத்தகைய மனிதனுக்குப் பணமும், உலகப்பொருட்களும் முன்பிருந்த கவர்ச்சியின்படி இனியும் அவனுக்கு இருப்பதில்லை. நித்தியத்தின் பிரகாசமே அவனை இப்போது ஆட்கொண்டிருக்கும். இந்த உலகமும், அதில் உள்ளவைகளும் ஏற்கனவே தேவனால் ஆக்கினைக்கு உள்ளாக்கப்பட்டது என்பதையும் அவை அனைத்தும் ஒரு நாள் கடந்து போய்விடும் என்பதையும் அவன் நன்கு அறிந்திருப்பான். ஆகவே அவன் இப்போது ஜீவிப்பதெல்லாம், தேவனுடைய சித்தம் மாத்திரமே செய்து பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைப்பதற்காகவேதான் ஜீவிக்கிறோம் என்பதையும் அவன் அறிந்திருப்பான் (1யோவான் 2:17; 1பேதுரு 4:1-3).
இவ்வாறிருக்க, இன்றுள்ள தேவனுடைய பிள்ளைகள், ஜனங்களையும் உலகத்தின் பொருட்களையும் ஓர் அவிசுவாசி காண்பதைப்போலவே "லௌகீக கண்களால்" இச்சித்து காண்பது மிகுந்த துயரமேயாகும். இதுபோன்ற ஒரு ஆத்துமா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் 'மெய்யான அர்த்தத்தை' அறியவே இல்லை என திட்டமாய் கூறலாம்.
உங்கள் நிலையை இப்போது பரீட்சித்துப் பார்க்க உங்களுக்கு விருப்பம் உண்டா?
ஜெபம்:
அன்பின் தகப்பனே! எங்களை நித்திய மேன்மைக்குள் நடத்தும்படி நீர் காண்பித்த சிலுவையின் வழி சென்றிட, இவ்வுலகத்தை உம்மைப்போல் 'துச்சமாய்' கண்டிட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments