இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 29
🔸️ தோல்வியில் ஒருபோதும் துவண்டுவிட கூடாது! 🔸️
நாம் பின்னிட்டுப் பார்ப்பதற்குத்தான் எவ்வளவாய் சோதிக்கப்படுகிறோம். கடந்த கால தோல்விகள் நம்மை வெகுவாக சோர்வுறச் செய்து பின்தங்கிடச் செய்கிறதே! இதுபோன்ற பின்தங்கும் சமயங்களில், "இனிமேல் நீ தேவனுக்கு எந்த உபயோகமும் அற்றவன்" என பிசாசானவன் நம் செவிகளில் முணுமுணுப்பது நிச்சயம்! மத்தேயு 21:2,3 வசனங்களில் கூறப்பட்ட "ஒரு கழுதைகூட ஆண்டவருக்குத் தேவையாய் இருந்தது" என்ற செய்தி எப்போதும் உற்சாகம் ஊட்டும் செய்தியாய் நமக்கு உள்ளது!
மேசியாவின் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை நிறைவேற்றுவதற்கும், மற்றொரு சமயத்தில் ஒரு தேவ செய்தியை கூறுவதற்கும் (எண்ணாகமம் 22:28) ஒரு கழுதை நம் ஆண்டவருக்குத் தேவையாக இருந்தால்.... நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாய் நம்பிக்கை உண்டு!! ரோமர் 15:4 கூறுகிறபடி, "தேவ வசனத்தில் முன்பு எழுதியிருக்கிறவைகள் எல்லாம் (பிலேயாம் கழுதை நிகழ்ச்சிகூட) நமக்கு ஆறுதல் செய்யும் போதனையாகவே எழுதியிருக்கிறது".
நம்மை நாமே ஒரு மதிகெட்ட கழுதையாகவும், இதுவரை பதினாயிரம் தவறுகள் செய்தவர்களாயும் எண்ணியிருக்கலாம்... ஆகிலும், "நாம் தான் ஆண்டவருக்குத் தேவை!" அவ்வாறு உங்களை அவர் தெரிந்துகொள்ளும்போது, உங்கள் மூலமாயும் ஆண்டவர் பேசுவார்!!
"நாளையைக் குறித்து கவலைப்படாதிருங்கள்" என மிகுந்த பரிவுடன் கூறும் நம் வேதப்புத்தகம் "பின்னாகத் திரும்பி கடந்த கால வாழ்க்கையின் நிமித்தம் சோர்ந்து விடாதீர்கள்!" என்றும் மிகுந்த கவனத்துடன் நம்மை எச்சரிக்கிறது.
நம் நேற்றைய தினங்களை மறந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, இன்றைய தினத்தை தைரியத்துடன் எதிர்நோக்கி, நாளைய எதிர்காலத்திற்கோ நம் ஆண்டவரையே சார்ந்து ஜீவிக்கக்கடவோம்!!
நாளைய தினத்தில் நாம் தோல்வியடைந்தால், அந்தத் தோல்வி நம்மை மனமுறிவுக்குள் அமிழ்த்திவிடாதபடி எச்சரிக்கையாயிருக்கக்கடவோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆண்டவரிடத்தில் சென்று நம்முடைய தோல்விகளை அறிக்கை செய்து அவருடைய இரத்தத்தினால் 'மீண்டுமாய்' கழுவப்படுவது மாத்திரமே! அதன் பின்பு நம்முடைய ஜீவிய பயணத்தில் 'மீண்டுமாய்' முன்னேறிச் செல்ல வேண்டும். மறுபடியுமாய் தோல்வியடைந்தால்? நாம் ஆண்டவரிடம் சென்ற அதே செயலை 'மீண்டுமாய்' தொடர வேண்டும்!! ஆம், எப்படியாகிலும் மனச்சோர்வில் மாத்திரம் தேங்கித் தங்கிவிடக்கூடாது.
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! நாங்கள் எத்தனை பெலவீனராக இருந்தாலும், நீர் எங்களை தெரிந்துகொண்டீரே! தோல்வியில் 'மனம் மடிந்து போகாதபடி' ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேறிச் சென்றிட எங்களுக்கு கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
1 Comments
iam really blessed.thank u bro
ReplyDelete