Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

செப்டம்பர் 04

 இன்று "அவருடைய" சத்தம்


செப்டம்பர் 4


🔸️ உள்ளத்தில் உண்மை விரும்பும் ஆண்டவர்! 🔸️


ஒருவன் ஒளிக்குள் பிரவேசிப்பதைக் குறித்து இயேசு கூறும்போது, "மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியால், அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளையே விரும்புகிறார்கள். பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியை பகைக்கிறான். தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ ஒளியினிடத்தில் வருகிறான்" (யோவான் 3:19-21) என இயேசு கூறினார். இங்கே உள்ள வேறுபாட்டை கவனியுங்கள். பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான் என்றுதான் இயேசு கூறினார். 'பொல்லாங்கு' என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் 'நன்மை' என்றே நாம் பொதுவாய் அறிந்திருக்கிறோம். எனவே இயேசு தொடர்ந்து கூறும்போது, நன்மை செய்கிற எவனும் ஒளிக்குள் வருகிறான் என கூறுவாரென்றே நாம் எதிர்பார்த்து எண்ணி இருப்போம்! ஆனால் இயேசுவோ அப்படிக் கூறவில்லை. மாறாக "சத்தியத்தின்படி செய்கிறவனே" ஒளியினிடத்தில் வருகிறான், என்றுதான் இயேசு கூறினார்!


இங்கு கண்ட வேறுபாட்டைப் புரிந்து கொண்டீர்களா? ஆம், இயேசு நம்மிடம் முதலாவது எதிர்பார்ப்பது நன்மையை அல்ல! நேர்மையாக இருக்கும் உண்மையையே முதலாவதாய் எதிர்பார்க்கிறார்!! எனவே இவ்வசனத்தின் பொருள் "நேர்மையாக இல்லாதவனே பொல்லாங்கு செய்கிறவன். ஆனால், தான் பூரணமாய் இல்லாதிருந்தும் ஒளியினிடத்தில் வருகிறவன் எவனோ, அவனே, நேர்மை உள்ளவன்!" என்பதுதான். நாம் நன்மையினால் பூரணமான பின்புதான் ஒளியினிடத்தில் வரமுடியும் என்றால், நம்மில் ஒருவர் கூட ஒருக்காலும் ஒளியினிடத்தில் வரவே முடியாது! ஆனால் தேவனோ, நேர்மையான ஜனங்கள் யாவரையும் தன்னண்டை வரும்படி அழைக்கிறார். ஆனால் இவ்வாறு, அவரிடம் வந்த நேர்மை உள்ளம் கொண்டவர்கள் ..... நாட்கள் செல்லச்செல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் நன்மையிலும் வளர்வார்கள்!!


நாம் நேர்மையை விரும்புகிறவர்களாய் இருந்தால் மாத்திரமே, "எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்" என்ற ஜெபத்தை மெய்யாய் ஜெபித்திட முடியும். நீங்கள் குறைவுள்ளவர்களாய் இருக்கலாம். இருப்பினும், உங்கள் குறையோடுகூட வெளிச்சத்திற்குள் நிச்சயமாய் பிரவேசித்திட முடியும்! இவ்வாறு யாரெல்லாம் நேர்மை உள்ளவர்களாய் தங்கள் பாவத்தை ஒத்துக்கொண்டு ஒளியின் இடத்தில் வருகிறார்களோ அவர்களே சத்தியத்தின்படி ஜீவிப்பவர்கள். இப்படிப்பட்டவர்களுடைய பாவம் நிச்சயமாய் கழுவப்பட்டு விடும்! 


ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! நேர்மையில் நடக்கும் ஒளியுள்ள வாழ்க்கையை எங்களுக்குத் தாரும்! ஒளியில் தென்படும் எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் சுத்திகரிப்பீரே, உமக்கே ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments