இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 11
🔸️ தேவனை சார்ந்து கொள்பவர்களே பரிசுத்தாவியை தொடர்ந்து நாடுவர்! 🔸️
இன்று வளர்ந்து வரும் விஞ்ஞான முன்னேற்றத்தில் பரிசுத்தாவியை முழுமையாய் சார்ந்து கொள்வதற்குப் பதிலாக எலக்ட்ரானிக் சாதனங்களையும் ஒளி-ஒலி நவீன இயந்திரங்களையும் மிக எளிதில் நாம் சார்ந்து கொள்ள முடியும்!!(அப்.1:8) சுவிசேஷத்தின் பிரபல்யத்திற்காக எங்கெல்லாம் நாம் விஞ்ஞான நவீனங்களைப் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டும்!! இருப்பினும், நம்மையும் அறியாமலே கொஞ்சம் கொஞ்சமாய் பரிசுத்தாவியை விட்டு விலகி, இந்த விஞ்ஞான சாதனங்களை நாம் சார்ந்து கொள்ள முடியும்! ஆகவே இவ்விஷயத்தில் நாம் மிகுந்த கவனமாய் இருக்கவேண்டும்.
'நாம் எதை சார்ந்து கொண்டிருக்கிறோம்?' என்ற நம் உண்மை நிலையை நாம் கண்டுபிடிப்பது மிக எளியதேயாகும். நாம் சார்ந்து கொண்டிருப்பது மெய்யாகவே பரிசுத்தாவியாக இருந்தால், "அவராலேயன்றி என்னால் எதுவும் இயலாது" என அறிக்கை செய்து, திரும்பத் திரும்ப பரிசுத்தாவியை தேவனிடத்தில் வேண்டி ஜெபிப்பதற்கு நாம் வந்துவிடுவோம். அவ்வாறு நாம் செய்கிறோமா? நம் மனசாட்சியை இலகுவாக்குவதற்காக நாம் செய்திடும் 'வழக்கமான' சடங்காகச்சார ஜெபத்தை இங்கு நாம் குறிப்பிடவில்லை. ஜெபம் என நாம் இங்கு குறிப்பிடுவது, நம்மையே முழுவதுமாய் தேவனிடத்தில் சரணடைந்து, அவருடைய முகத்தை வாஞ்சையோடு தேடுவதேயாகும். இன்னும் தேவைப்பட்டால் உபவாசத்தோடே அவரது முகத்தைத் தேடி "நம்மை அழைத்த ஊழியத்திற்குத் தேவையான வல்லமையோடு பரிசுத்த ஆவியானவர் நம்மில் தங்கியிருக்கிறார்" என்ற நிச்சயத்தைப் பெற்றுக் கொள்ளும் வரை தேட வேண்டும். இவ்வாறு அவருடைய வல்லமையை நாம் நாடும் செயல், ஏதோ ஒரே நாளில் பெற்றுவிடும் மொத்த அனுபவம் அல்ல.... ஆம், ஒவ்வொரு நாளும் நாம் இவ்வாறாகத் தேட வேண்டும்!!
'நாம் பணத்தை சார்ந்து இருக்கிறோமா?' அல்லது 'நாம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை சார்ந்து இருக்கிறோமா?' என்பதை சோதித்துப் பார்க்க 'ஒரு கேள்வியை' உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள். உங்களை பொருளாதாரரீதியில் தாங்குபவர்கள் திடீரென அந்த ஆதரவை நிறுத்திவிட்டால், நீங்கள் அடைந்திடும் துயரத்திற்கு சமமாகவே, தேவன் உங்களுக்குத் தந்த அபிஷேகத்தை அகற்றிவிட்டால் "அதே துயரத்தை" அடைவீர்களா? இவ்வித துயரம் கொண்டவர்களே நாள்தோறும் பரிசுத்த ஆவியினால் நிரம்பிட ஜாக்கிரதை கொண்டிருப்பார்கள்!
ஜெபம்:
எங்கள் பரலோக தகப்பனே! மாயையான ஏதுகரத்தில் எங்கள் மனம் சாய்ந்துவிடாமல் உம்மையும், உமது தூய ஆவியையுமே என்றென்றும் சார்ந்து வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments