இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 14
🔸️ அன்பின் பெருக்கினால் கர்த்தரை சேவித்திடக்கடவோம்! 🔸️
ஏராளமான தேவனுடைய பிள்ளைகள் ஒரு வறண்ட அனுசாரமாகவே தேவனை சேவிப்பது துயரமானதேயாகும். ஆம், நியமனம் செய்யப்பட்ட மார்க்க சடங்குகளை எல்லாம் உண்மையாய் இவன் நிறைவேற்றினான்! ஒரு சுருக்கமான காலை-மாலை தியானம் வைத்திருப்பான்! அதைத்தொடர்ந்து, சில ஜனங்களின் பெயர்களை கிளிப்பிள்ளையைப்போல் தேவனிடத்தில் ஒப்பித்து அவர்கள் தேவைக்காக விண்ணப்பம் செய்வான்! இதோடு சேர்த்து, வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு சில சமயங்களில் மூன்று கூட்டங்களுக்குகூட செல்வான்! இவை அனைத்தையும் செய்துவிட்டு, போதுமான அளவு தேவனைப் பிரியப்படுத்திவிட்டதாகவே நம்பியிருப்பான்! இதன் நிமித்தமாய் இனிமேல் தனக்கோ அல்லது தன் குடும்பத்திற்கோ ஒரு ஆபத்தும் ஏற்படக்கூடாது! தன் எல்லா பிள்ளைகளும் பரீட்சையில் பாஸ் ஆகியிருக்க வேண்டும்! தன் உத்தியோகத்துக்குரிய பதவி உயர்வு டக்.... டக்கென்று கிடைக்க வேண்டும்! என்றெல்லாம் எதிர்பார்த்தும் நம்பியிருக்கிறான்!!
இதைவிட மேலாய், சுவிசேஷ ஊழியத்திற்கும் தான் ஏதாவது செய்துவிட்டால் அதன் நிமித்தமும் 'இறுமாந்து' நம்பிக்கை கொண்டிருப்பான்!! இந்த எதிர்பார்ப்புக்கெல்லாம் மாறாக "ஏதாகிலும் நடந்துவிட்டால்" உடனே பொங்கும் குறைசொல்லை தேவனிடத்தில் கொட்டுவான்.... அதற்குக் காரணமாயிருந்த மனிதர்களிடத்திலும் கொட்டுவான்!!
தேவனுக்கென்று யாதொன்றும் செய்யாமல் இருப்பதைவிட, அவருக்கு பயந்தாகிலும் ஊழியம் செய்வது கொஞ்சம் பரவாயில்லைதான்! ஆகிலும், இதைவிட மேலான... அன்பின் உன்னத வழி ஒன்று இருக்கிறதே!! (1 கொரி. 12:31; 13:1). கர்த்தர் நம்மை தண்டித்துவிடுவாரோ என அவருக்குப் பயந்து நமது மார்க்க செயல்பாடுகளை நிறைவேற்றிட தேவன் ஒருபோதும் விரும்புவதேயில்லை.
தன் கணவனை அன்புகூர்ந்து அவனை சேவித்திடும் மனைவியைப் போலவே, நாமும் கர்த்தரை சேவித்திட தேவன் விரும்புகிறார்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! உம்மையும் உம் வழிகளையும் "உம்மை அன்புகூர்ந்து" பின்பற்றுவதே மகிழ்ச்சியான கிறிஸ்தவ ஜீவியம் என உணர்த்தியமைக்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments