இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 16
🔸️ தன் பெற்றோர்களை கனம் செய்யும் நல்ல குடும்பம்! 🔸️
யோசேப்பும் மரியாளும் நாசரேத்தில் தன்னுடைய வீட்டில் பல முறை தவறு செய்து வீழ்ச்சியுற்றதை ஆண்டவராகிய இயேசு நிச்சயமாய் கண்டிருப்பார்... அப்படியிருந்தும், அவரோ அவர்களை அசட்டை செய்யவேயில்லை. "இதுபோன்ற செயலே" நம் பெற்றோர்களை கனம் செய்வதற்குரிய உண்மையான அர்த்தமாகும்.
"உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை செய்யாதே" என்றே நீதிமொழிகள் 23:22 கூறுகிறது. ஆம், உங்கள் பெற்றோர்களிடம் தவறுகளைக் காணும்போது, அவர்களை அசட்டை செய்யாதிருங்கள். அவர்களின் பெலவீனத்தை மூடிவிட்டு, அந்த பெலவீனத்தைக் குறித்து யாரிடமும் பேசாதிருங்கள்.
உண்மையில், இத்தகைய செயலை நம் பெற்றோர்களுக்கு மாத்திரமல்ல, எல்லா ஜனங்களுக்குமே அப்படியே செய்திட வேண்டும். ஏனெனில், உண்மையான அன்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த அன்பு "திரளான பாவங்களையும் மூடிவிடும்" என்றே வேதம் சுட்டிக் காட்டுகிறது.
நீங்கள் "மறுபடியும் பிறந்த" விசுவாசியாய் இருந்து, உங்கள் பெற்றோர்கள் அவிசுவாசிகளாக இருந்தால், அவர்கள் வேத வசனத்திற்குப் புறம்பாக "நீ இந்த விக்கிரகத்தை வணங்கவேண்டும்... இந்தப் பெண்ணை (இரட்சிக்கப்படாத பெண்ணை) திருமணம் செய்திட வேண்டும்..." என்றெல்லாம் கூறும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களிடம், "என் பெற்றோர்களே, இப்போது நீங்கள் கூறுவதை என்னால் செய்திட முடியாது! ஏனென்றால், நான் விசுவாசிக்கும் வேதப்புத்தகம் இவைகளை தடை செய்திருக்கிறது" என்றே நீங்கள் மிகுந்த மரியாதையுடன் கூறவேண்டும். நீங்கள் நிச்சயமாய் ஆண்டவருக்காக உறுதியாய் நின்றிட வேண்டும். ஆனால் அதேசமயம், கரடுமுரடான அகங்காரத்தோடு நின்றுவிடவும் கூடாது. ஆம், நீங்கள் அளித்திடும் பதில் கிருபையும் மென்மையும் நிறைந்ததாகவே இருந்திட வேண்டும்!
ஆனால், வேத வசனத்திற்கு கீழ்ப்படியாமையைக் கொண்டுவராத மற்ற எல்லா விஷயங்களிலும், "பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களோடு வசிக்கும் காலம் வரை" அவர்களுக்குக் கீழ்படிந்தே இருக்க வேண்டும்! இருப்பினும், பிள்ளைகள் திருமணமாகிப் பெற்றோர்களுடைய வீட்டை விட்டு வெளியேறி தங்களுக்கென "ஒரு சொந்த குடும்பத்தை" அமைத்துக்கொண்ட பின்பு... இனியும் அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு தொடர்ந்து கீழ்ப்படிய வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை!! ஆனால், பெற்றோர்களுக்கு கனம் செய்து அவர்களை விசாரிப்பதை நாம் தொடர்ச்சியாய் செய்திட வேண்டும்!!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! ஆண்டவர் இயேசு எங்களுக்கு முன் வைத்த மாதிரியின்படி, எக்காலத்திலும் எங்கள் பெற்றோர்களை அசட்டை செய்யாமல் கனம் செய்து வாழ கிருபை தாரும்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments