Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

செப்டம்பர் 19

 இன்று "அவருடைய" சத்தம்


செப்டம்பர் 19


🔸️ தேவனுடைய அன்பின் கரத்திலிருந்தே சகலமும் நமக்கு சம்பவிக்கிறது! 🔸️


இந்த ஒரு உண்மையில் நம்முடைய விசுவாசம் திடமான அஸ்திபாரம் கொண்டிருக்க வேண்டும்! அந்த உண்மை என்னவெனில், "தேவன் நம்மோடு இடைபடும் அனைத்து கிரியைகளும் அவருடைய அன்பை ஆதாரமாகக் கொண்டே இருக்கிறது" என்பதுதான். செப்பனியா 3:17-ல் "தம்முடைய அன்பின் நிமித்தம் அவர் அமர்ந்திருப்பார்" என்ற வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு "தேவன் உனக்காக தன் மிகுந்த அன்பினால் நிறைந்து, மௌனமாய் அமர்ந்து, திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்" என்பதுதான். இவ்வாறு நம் ஜீவியத்தில் பிரவேசிக்கும்படி தேவன் அனுமதிக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்கள்கூட, தன் அன்பினால் திட்டம் வகுக்கும் தேவனுடைய இருதயத்திலிருந்துதான் புறப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?


உங்களுடைய வாழ்க்கையில் பிரவேசிக்கும் ஒவ்வொரு உபத்திரவமும், பிரச்சனைகளும் முடிவில் "நம்முடைய நன்மைக்காக இருக்கும்படியே" தேவன் ஏற்கனவே திட்டம் தீட்டியிருக்கிறார். 


நாம் போட்ட திட்டங்களை அவர் பலமுறை மாற்றி அழித்துவிடுகிறாரே, ஏன்? ஆம், அவர் நமக்கென்று திட்டமிட்டு வைத்திருக்கும் முதல் தரமானதை நாம் இழப்பதிலிருந்து நம்மை காப்பதற்கே அவ்வாறு செய்கிறார்! இவை அனைத்தையும் இந்த பூமியிலே நாம் முழுவதுமாய் அறிந்து கொள்ளக் கூடாததாய் இருக்கலாம். ஆனால், சகலமும் அன்பின் தேவனுடைய கரத்திலிருந்துதான் வருகிறது என்பதையாவது நாம் செம்மையாய் உணர்ந்து கொண்டால், அதுவே நம்மைத் தாக்கும் எல்லா கவலைகளிலிருந்தும், பயத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கிவிடும்!! ஆனால், இன்று விசுவாசிகள் இந்த சத்தியத்தில் உறுதியாக நிலை கொள்ளாதபடியால், வேதம் குறிப்பிடும் "புத்திகெட்டா தேவ சமாதானத்திற்கும், சொல்லிமுடியா மகிழ்ச்சிக்கும்" "மகிமையின் பூரணத்திற்கும்" இந்த விசுவாசிகள் அந்நியர்களாகவே தேங்கி நின்று விட்டார்கள்! 


இந்த பூமியில் இயேசு கிறிஸ்து செய்த ஊழியங்கள், பழைய ஏற்பாட்டை நன்றாய் கற்றிருந்த அன்றைய ஜனங்கள், தங்கள் தேவனைப்பற்றி தாங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்கள் யாவையும் திருத்தி அமைப்பதாகவே இருந்தது. எத்தனையோ முறை தன் சீஷர்களிடத்தில் "அவர்களின் பரமபிதா அவர்களை நேசிப்பதையும் அவர்களுடைய தேவையைக்குறித்து அவர் அக்கறை கொண்டிருப்பதையும்" திரும்பத் திரும்ப அவர்களுக்கு எடுத்துரைத்தார்.


ஜெபம்:

எங்கள் பரம பிதாவே! எங்கள் வாழ்வில் ஏற்படும் சம்பவங்கள், நீர் எங்கள் மீது வைத்த அன்பை நாங்கள் ஒருபோதும் சந்தேகிக்காமலிருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments