இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 22
🔸️ பெருமை அணுகாதிருக்க நம் வீழ்ச்சியின் குழியை மறக்கக்கூடாது 🔸️
பேதுரு, மற்ற கிறிஸ்தவர்களை எச்சரித்தபோது, "முன் செய்த பாவங்களற நாம் சுத்திகரிக்கப்பட்டதை மறவாதிருக்கக் கடவோம்" (2 பேதுரு 1:9) எனக் கூறினார். இதற்கு மாறாகத் தன் முந்திய நிலையை மறக்கிறவன் எவனோ அவன் 1)கண் சொருகி போனவன்! (Short-sighted கிட்டப்பார்வை கொண்டவன்). 2) குருடன்! என கடிந்து எச்சரித்தார். இவ்வாறு நான் ஒருபோதும் கண்சொருகிப்போன "கிட்டப்பார்வை" கொண்டவனாகவும், குருடனாயும் இருக்க ஒருதுளியும் விரும்பவேவில்லை. நான் எக்காலத்தும் பரலோக பொக்கிஷங்களையும் நித்திய மதிப்புகளையும் காணக்கூடிய "ஓரு நீண்ட தூரப் பார்வை" கொண்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.
கண் சொருகிப்போன கிட்டப்பார்வை கொண்டவர்கள் யார்? யாரெல்லாம் பூமிக்குரியவைகளையும் பாவத்தின் இன்பங்களையும், பொருளாதார ஆஸ்திகளையும், மனுஷர் அங்கீகாரத்தையும் உயர்ந்த மதிப்புடையதாய் மதிக்கிறார்களோ, அவர்களே கண் சொருகிப்போன கிட்டப்பார்வை கொண்டவர்கள். இதுபோன்ற விசுவாசிகளுக்கு நாம் பரிதவித்து வருந்துவோமாக! பார்வையில் பலவீனமடைந்து சுமார் 10 அடிக்குமேல் எதையும் பார்க்க முடியாத ஒரு மனிதனை நீங்கள் கண்டால், அவன் மீது உங்களுக்கு கோபம் வருவதில்லை! மாறாக, அவனுக்காகப் பரிதாபமே கொள்வீர்கள்.
எந்தக் குழியிலிருந்து தேவன் அவர்களை தூக்கிவிட்டாரோ, "அந்தக் குழியை" இவர்கள் மறந்துவிட்டார்கள்! அதன் விளைவாய், ஏதாகிலும் சில பகுதிகளில் தேவன் அவர்களை ஆசீர்வதித்தவுடன், இமைப்பொழுதில் பெருமையும் அடைந்துவிடுகிறார்கள்!
நானோ, தேவன் என்னைத் தூக்கி எடுத்த பாதாளக்குழியை ஒருபோதும் மறக்க விரும்பவில்லை! என்னுடைய எல்லா பாவங்களும் கழுவப்பட்டு, அவைகளில் ஒரு பாவத்தைக்கூட தேவன் நினைவுகூருவதில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன். நான் "கிறிஸ்துவின் இரத்தத்தால் நீதிமானாக்கப்பட்டதின் நிமித்தம்" (ரோமர் 5:9) கடந்த ஆண்டுகால ஜீவியத்தில், நான் ஒருபோதும் பாவம் செய்யாதவனைப் போலவே, தேவனுக்கு முன்பாகத் தைரியம் பெற்று நிற்கிறேன். ஆம், தேவனும் என்னை அப்படியேதான் காண்கிறார். இருப்பினும், நான் ஒரு காலத்தில் எப்படியிருந்தேன் என்பதையோ ஒருக்காலும் நான் மறந்துவிடவேமாட்டேன்! ஆண்டவர் என்னைப்பார்த்து, "நான் உன் பாவங்களை இனி நினையாமலிருப்பேன்" (எபி 8:12) என்றே கூறுகிறார். ஆனால், பெருமையின் குழியில் விழாதிருக்க, நான் முற்காலத்தில் எந்த இழிநிலையில் இருந்தேன் என்பதையோ நான் நினைவுகூருவேன்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! எங்களின் பெருமைக்குக் காரணம், நாங்கள் வீழ்ச்சியுற்ற குழியை மறந்துவிட்டதாலேயே! என உணர்த்தியமைக்கு நன்றி! எந்நாளும் தாழ்மையாய் உமக்கு முன் வாழ கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments