Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

செப்டம்பர் 26

 இன்று "அவருடைய" சத்தம்


செப்டம்பர் 26


🔸️ பிறரை மனப்பூர்வமாய் மன்னித்திட வேண்டும்! 🔸️


கர்த்தருடைய ஜெபத்தில் "நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுக்கு மன்னியும்" (மத்தேயு 6:12) என குறிப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். ஆம், நாம் பிறரை எவ்விதம் மன்னித்திருக்கிறோம் என்பதை தேவன் துல்லியமாக அளந்து பார்க்கிறார். ஏனெனில், நாம் அளக்கிற அளவின்படியே நமக்கும் அளக்கப்படும் என ஆண்டவராகிய இயேசு போதித்தார். அவ்வாறு கூறும்போது, "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்" என இயேசு கூறினார் (லூக்கா 6:38). அதாவது, நீங்கள் பிறருக்குக் கொடுப்பதற்கு சிறிய ஸ்பூனை உபயோகித்திருப்பீர்களென்றால், உங்கள் ஜெபங்களுக்கு பதில் அளிக்கும் தேவன் அதே சிறிய ஸ்பூனைத்தான் உங்களுக்கும் உபயோகிப்பார்! நீங்களோ பெரிய காரியங்களை எதிர்பார்த்து, பலத்த கிரியைக்காக தேவனிடம் ஜெபித்தீர்கள். ஆனால் தேவனோ சிறிய ஸ்பூனை எடுத்து உங்களுக்கு கொஞ்சம்தான் கொடுத்தார்! ஏன் தெரியுமா? நீங்கள் அந்த சிறிய ஸ்பூனை வைத்துத்தான் பிறருக்குக் கொடுத்தீர்கள். நீங்கள் எந்த அளவிற்கு பெரிய ஸ்பூனை உபயோகப்படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு தேவனும் பெரிய ஸ்பூனைக் கொண்டு உங்களுக்குக் கொடுப்பார். தேவனுக்கு இந்தச் சட்டம் மாறாத சட்டமாகும்! நமக்குப் பரிமாற வரும் தேவன், இந்த சட்டத்தின்படியேதான் செயல்படுகிறார். 


மத்தேயு 5:7-ல், "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" என இயேசு கூறினார். நீங்கள் எவ்வளவு அதிகமாய் பிறரிடம் இரக்கம் காண்பிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் நியாயத்தீர்ப்பு நாளில் தேவனும் உங்கள் மீது இரக்கமாயிருப்பார். "ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கோ இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்" என யாக்கோபு 2:13 கடுமையாக எச்சரிக்கிறது!  


எனவே, நீங்கள் பிறரை மிகவும் கொஞ்சமாய் ஒரு கருமியைப் போல் மன்னித்திருப்பீர்களென்றால், அதே போலவே தேவனும் உங்களுக்கு மன்னிப்பார். உங்களுக்குத் தீங்கிழைத்த ஒருவரை அன்பு ததும்பும் மன்னிப்பின் பார்வையால் பார்த்திருப்பீர்களென்றால், தேவனும் அவ்வாறே உங்களுக்குத் தன் அன்பு ததும்பும் மன்னிக்கும் பார்வையை கடாட்சித்திருப்பார்! ஆம், நீங்கள் பிறரை எவ்வாறு நடத்தினீர்களோ, அதைப்போலவே தேவனும் உங்களை நடத்துவார்!!


ஜெபம்:

எங்கள் பரலோக பிதாவே! எங்களை நீர் மனப்பூர்வமாய் மன்னித்து போலவே, எங்களுக்கு தவறு செய்கிறவர்களை மனப்பூர்வமாய் மன்னித்து, உம்முடைய தயவை ஏராளம் பெற்றிட கிருபை செய்தருளும்! 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments