Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

செப்டம்பர் 28

 இன்று "அவருடைய" சத்தம்


செப்டம்பர் 28


🔸️ சோதனையை ஜெயிப்பதே பரிசுத்த ஜீவியம்! 🔸️


ஒரு கடும் யுத்தத்திற்கு பிறகு விளைவதுதான் உண்மையான பரிசுத்தமாகும் (எபேசியர் 6:12). குஷியான நாற்காலியில் அமர்ந்துகொண்டு 'ஆகாய ஊஞ்சலின் மலர் படுக்கையை' கனவு கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு உண்மைப் பரிசுத்தம் ஒருபோதும் கிட்டாது! நம்முடைய இச்சைகளையும், சாத்தானையும் எதிர்த்துப் போரிடும்போது மாத்திரமே உண்மையான பரிசுத்தத்தை நாம் அடைகிறோம்!!


இவ்வாறு, "நம் பரிசுத்தத்திற்கு பிசாசு தடையாக இருந்தால் அவனை ஏன் தேவன் அழிக்கக்கூடாது?" என நாம் கேட்கக்கூடும். இதற்கு விடை யாதெனில், பொன்னை சுத்திகரித்து புடமிடுவதற்கு ஓர் அக்கினி உலை எங்ஙனம் தேவையோ, அதைப் போலவே நம் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பிசாசுகூட தேவையாய்த்தான் இருக்கிறான்! நம் தசைகள் கடும் அப்பியாசத்திற்குள்ளாகும்போது மாத்திரமே வலிமை பெற்று விளங்குகிறது. இல்லாவிட்டால் நாம் வெறும் கொழுத்த "தோலா-தொப்புளா" மனிதர்களாய் காணப்படுவோம்! ஆவிக்குரிய ஜீவியமும் இதற்கு ஒப்பானதேயாகும். 


நாம் ஆவிக்குரிய ஜீவியத்தில் வலிமை கொண்டவர்களாய் இருக்க வேண்டுமென்றால், நமக்கு எதிர்ப்புகள் அவசியம். இதனிமித்தமே நம்மை சோதிப்பதற்கு தேவன், சாத்தானை அனுமதித்திருக்கிறார்! கஷ்டமில்லாத இலகுவான வாழ்க்கை கொண்ட ஒரு மனிதன் எப்போதுமே தன் ஆவிக்குரிய ஜீவியத்தில் நலிவுற்று பெலவீனனாகவே காணப்படுவான். அவன் செய்யவேண்டும் என தேவன் விரும்பினவைகளை அவனால் செய்திட முடியாது! ஆனால் கடுமையான பாடுகளுக்குள்ளும் பரீட்சைக்குள்ளும் பிரவேசித்து ஜெயம் பெற்று வரும் ஒரு மனிதனோ, தேவனுடைய சகல பரிபூரண சித்தத்தையும் செய்து முடிக்க வலிமை பெற்றவனாய் விளங்குவான்!! இதனிமித்தமே, சாத்தானை அழிக்காமல் தேவன் வைத்திருக்கிறார். 


ஏதேன் தோட்டத்தில் ஒரு விலக்கப்பட்ட மரத்தை தேவன் ஏன் வைத்தார்? இவ்வாறு அந்த மரத்தை தேவன் வைக்காமலிருந்தால், ஆதாம் பாவம் செய்திருக்க மாட்டானே என்றுகூட அநேகர் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை யாதெனில், ஆதாம் பரிசுத்தமாவதற்கு அந்த மரம் அவசியமாயிருந்தது. ஆம், மனிதனுக்கு சோதனை இல்லாமல் பரிசுத்தம் ஒருபோதும் கைகூடாது. இதனிமித்தமே, ஏதேன் தோட்டத்திற்குள் சாத்தான் பிரவேசிக்க தேவன் அனுமதி வழங்கினார்!!


ஜெபம்:

எங்கள் பரம தந்தையே! எங்களை அணுகும் சோதனைகளை உம் கிருபையால் ஜெயித்து "பரிசுத்தம்" அடைந்திட கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments