இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 30
🔸️ உத்தம கிறிஸ்தவ ஜீவியத்தில் உபவாசம் வேண்டும்! 🔸️
1 கொரிந்தியர் 7-ம் அதிகாரத்தில் பவுலும், மத்தேயு 17-ம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசுவும் உபவாசிப்பதின் அவசியத்தைக் கூறினார்கள். குறிப்பாக அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்கு உபவாசம் அவசியம் என்பதை இயேசு எடுத்துக்கூறினார். எனவே உபவாசம், நாமாகவே விரும்பி, நமக்குள்ள பாரத்தின்படி தெரிந்துகொள்ளும் கிரியையே ஆகும்.
இவ்வாறு உபவாசிக்கும்போது ஒருவருக்கும் தெரியாதபடி உபவாசிப்பதையே இயேசு மிகவும் வலியுறுத்தினார். ஒருவேளை நம் வீட்டில் உள்ளவர்களுக்கு நாம் உபவாசிப்பதை மறைக்க முடியாது. ஆனால், நிச்சயமாய் நாம் மனுஷர் காணும்படி ஒருக்காலும் உபவாசிக்கக்கூடாது! எனவே உபவாசத்தைவிட, உபவாசத்திற்குப் பின்பாக உள்ள நோக்கம் மிகவும் முக்கியமாகும்!!
தன்னுடைய சீடர்கள் உபவாசிப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் "நீங்கள் உபவாசிக்கும்போது" (மத்தேயு 6:16) என இயேசு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், ஜனங்களுக்கு முன்பாக உங்கள் உபவாசத்தின் முகவாடலை காண்பிக்க வேண்டாம் என்றும், அப்படிச் செய்தால் நீங்கள் மாயக்காரராய் இருப்பீர்கள் என்றும் இயேசு எச்சரித்தார்.
ஆனால், இன்று ஏராளமான விசுவாசிகள் தாங்கள் "இத்தனை நாட்கள்" உபவாசித்தோம் என வெளியே ஜம்பமாக கூறுகிறவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் மத்தேயு 6:16,17-ன் இயேசுவின் கட்டளையை பகிரங்கமாய் அலட்சியம் செய்கிறார்கள். இவர்களின் பலன் இப்பூமியிலேயே அடைந்து தீர்ந்துபோனது என இயேசு கூறினார். அதாவது உபவாசத்தினால் நாம் தேவனிடமிருந்து பெற வேண்டிய பலனை, இப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று இவ்வசனம் இடித்துரைக்கிறது. எனவேதான், நாம் உபவாசிப்பதை மனுஷர் அறிந்துகொள்ளாமல் இருக்கும்பொருட்டு, முகத்தைக் கழுவி, தலைக்கு எண்ணெய் பூசி இருக்கவேண்டும் என இயேசு புத்தி கூறினார்.
இவ்வாறு நாம் மெய்யாகவே உபவாசத்தின் பலனைத் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்கிறவர்களாய் இருக்க வேண்டுமென்றால், நம்மால் கூடுமானமட்டும் அந்தரங்கத்தில் உபவாசித்திட ஜாக்கிரதை கொண்டிருக்கடவோம்! அப்போது, அந்தரங்கத்தில் பார்க்கும் பிதா நம் உபவாசத்திற்கு வெளியரங்கமாய் பலன்தருவார்!!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! உம்மிடம் இன்னமும் நெருங்கி வரவும், 'அசுத்தங்களை' (அசுத்த ஆவி) மேற்கொள்ளவும் தந்த உபவாசத்தை அந்தரங்கத்தில் கிரமமாய் செய்திட உதவி செய்தருளும்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments