Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 04

 இன்று "அவருடைய" சத்தம்


அக்டோபர் 4


🔸️ தெய்வீக அன்பு தணிந்திடக் கூடாது! 🔸️


அன்பற்ற சூழ்நிலையை நாமும் அன்பற்ற உள்ளத்தோடு சந்திக்கலாமா? இவ்வித சூழ்நிலைகளில்தான், "தேவரீர் என் இருதயத்தில் தோன்றும் எல்லாத் தடைகளையும் அகற்றிவிட்டு உம்முடைய அன்பை எனக்குள் ஊற்றிவிடும்!" என ஜெபித்து கதறுபவர்களாய் இருக்க வேண்டும்!!


தேவ அன்பு நம்மில் பூரணமாய் ததும்பி வழியும் மட்டும் இக்கதறல் நம்மோடு இருக்கட்டும்! இவ்வாறு நம்முடைய அன்பற்ற தன்மைக்காய் தீராத துயரம் கொண்டு தேவனிடத்தில் திரும்பி, "தேவனே என் இருதயத்தை உம்முடைய அன்பினால் நிறைத்துவிடும்!" என நாம் ஜெபித்திடும் நிலைக்கு வருவதை காண்பதற்கு தேவன் எவ்வளவாய் தவித்து காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம்!


ஏதோ, தேவன் தம்முடைய அன்பினால் நம்முடைய இருதயத்தை நிரப்புவதற்கு விருப்பம் இல்லாதிருப்பது போல.... "தேவ அன்பு என் உள்ளத்தில் நிறையட்டும்!" என முடிவில்லாத ஜெபத்தை நாம் செய்திட வேண்டியதில்லை! ஆம், எவ்வாறு திறந்து வைக்கப்பட்ட ஒரு அறையில் சூரிய ஒளி பாய்ந்து நிரப்புகிறதோ, அதைப்போலவே நம்முடைய இருதயத்தை தம்முடைய அன்பினால் நிறைத்துவிடுவதற்கு தேவன் மகா விருப்பம் கொண்டுள்ளார். நாம் சுவாசிக்கும் காற்று நம்மைச் சுற்றிலும் சூழ்ந்து நெருக்கி இருப்பதைப் போலவே தேவ அன்பும் நம்மைச் சூழ்ந்து எப்போதும் நெருக்கி நிற்கிறது. அந்த அன்பு உள்ளே பிரவேசிக்க முடியாமல், கதவை மூடி தடை செய்யாதிருங்கள்!


நீங்கள் மாத்திரம் தடைகளை அகற்றி, கதவைத் திறந்துவிட்டால், தேவ அன்பின் வெள்ளம் உங்கள் உள்ளம் புளகாங்கிதம் அடையும்படியாய் நிறைத்துவிடுவதை காண்பீர்கள்!!


இந்த அன்பின் ஜீவியத்தை வாழ்ந்துவிடும்படி தீராத வாஞ்சை கொண்டவர்கள் மாத்திரமே, பரிசுத்த ஆவியானவர் தங்களை நிறைத்துவிடும்படியாய் எப்போதும் தங்கள் இருதயத்தை கழுவி சுத்திகரித்துக் கொள்ள ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள். தேவனும் இவர்களின் இதய கூக்குரலைக் கேட்டு, அவர்களை மீண்டும் மீண்டுமாய் தம் அன்பினால் நிறைத்துக் கொண்டே இருப்பார்!  


"இந்த அன்பிற்காய் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்".


ஜெபம்:

எங்கள் பரலோக தந்தையே! எங்கள் இருதயத்தில் உமது அன்பு எந்த சூழ்நிலையிலும் ஆட்கொண்டிருக்க உதவி புரிந்தருளும்! ஒருபோதும் எங்கள் இதயக் கதவு அன்பிற்கு அடைபடாதிருக்க கிருபை செய்தருளும்;  

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments