இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 12
🔸️ நம்முடைய காயம் பிறரை ஆசீர்வதித்திடும்! 🔸️
துன்பங்களின் மத்தியில் அன்பையும், மன்னிப்பையும் காத்துக்கொள்வதே "மீட்பின் வல்லமையை" வெளிக்கொண்டுவருவதற்குரிய திறவுகோல் என்ற "அறிவை" ஆண்டவராகிய இயேசு ஒரு வெளிப்பாடாய் பெற்றிருந்தார். எனவேதான், தேவனைப் பற்றும் அறிவினால் என் தாசனாகிய அவர் அநேகரை நீதிமான்களாக்குவார், அவர்களுடைய அக்கிரமங்களை தாமே சுமந்துகொள்வார் (ஏசாயா 53:11) என நாம் வாசிக்கிறோம்.
ஜனங்களை மறுரூபப்படுத்தும் வல்லமை புறப்பட்டுவரும் இரகசியம் சிலுவையில் மாத்திரமே உண்டு என்பதை இயேசு அறிந்திருந்தார்! சிலுவையில் அவருக்கு ஏற்பட்ட அத்தனை கேடு நிறைந்த காயங்கள்தான், இந்த உலகத்தின் மீட்பிற்கு ஏதுகரமாயிருந்தது.... அந்த சிலுவைக்கே இயேசு நம்மை இப்போது அழைக்கிறார்!! (மத்தேயு 16;24).
"காயமடைதல்" என்ற பலிபீடத்தில் மாத்திரமே நம்முடைய பலிகளை நாம் தேவனுக்குப் படைத்திட முடியும்!! இந்த காயப்படுவதின் வல்லமையைக் குறித்த மாபெரும் சத்தியத்தை ஏசாயா 53-ம் அதிகாரத்தில்தான் நாம் கண்டுபிடிக்க முடிகிறது. ஆம், "கர்த்தரோ அவரை நொறுக்க சித்தமாகி அவரைப் பாடுகளுக்குள் உட்படுத்தினார். கர்த்தருக்குச் சித்தமானது, அவர் கையினால் வாய்க்கும்" (ஏசாயா 53:10) என்பதே அந்த ஒப்பற்ற சத்தியம்!
தேவனுக்குப் பிரியமானதை (சித்தமானதை) இயேசு எவ்வாறு பெற்றார்? அந்த பிரியம் தேவனுடைய கரத்தில் எவ்வாறு செழிப்பாய் வாய்த்தது? அவர் நொறுக்கப்பட்ட வேளையில், காயமடைந்த வேளையில், அவர் சின்னாபின்னமாக்கப்பட்ட வேளையில்.... அவை யாதொன்றிற்கும் பதிலுக்குப் பதில் செய்யாமல், தன்னையே ஒரு பலியாய் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டார் என்பதுதான் அந்த மேலான இரகசியம்!
ஆகவே, நாம் சந்திக்கும் நொறுக்கப்படும் அனுபவம் அழிவுக்குரியது அல்லவே அல்ல! மாறாக, அது நமக்கு கிடைத்த ஓர் ஒப்பற்ற சந்தர்ப்பமே ஆகும்!!
இவ்வித நொறுங்குதலுக்கு நம்மையே ஒப்புக் கொடுப்பதும் அன்பை வெளிப்படுத்துவதும், நம்மை காயப்படுத்திய பாவிகளின் இருதயத்தை தொடலாம் அல்லது தொடாமல் இருக்கலாம்! ஆனால், அது நிச்சயமாய் தேவனுடைய இருதயத்தை தொட்டுவிடும்!
ஜெபம்:
எங்கள் பரலோக தந்தையே! உம்முடைய தழும்புகளால் நாங்கள் குணமடைந்தது போலவே, எங்களை காயப்படுத்துவோர்களை மன்னித்து ஆசிர்வதித்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments