Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

அக்டோபர் 13

 இன்று "அவருடைய" சத்தம்


அக்டோபர் 13


🔸️ சிலுவைக்கு நம்மை ஒப்புக் கொடுத்திடக்கடவோம்! 🔸️


சிலுவைக்கு விலகி ஆண்டவராகிய இயேசு தப்பிச் சென்றிருக்க முடியும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்! ரோம போர் வீரர்கள் இயேசுவைப் பிடிக்க வந்தபோது, அவர் பேதுருவைப் பார்த்து "நான் இப்போது பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரெண்டு லேகியோனுக்கும் அதிகமான தூதரை என்னிடத்திற்கு அனுப்பமாட்டார் என்று நினைக்கிறாயா?" (மத்தேயு 26:53) எனக் கேட்டார். ஆம், ஒரு நாடித்துடிப்பின் நேரத்திற்குள்ளாக வானங்கள் முழுவதும் ஆயிரமாயிரமான தூதர் சேனைகள் இறங்கிவந்து நிறைத்திருக்க முடியும்! அவ்வாறு தப்பிக்கும் வழியை இயேசு தனக்கென தெரிந்துகொண்டிருந்தால், மனுக்குலம் முழுவதும் கெட்டு சீரழிந்து போயிருக்கும். நாம் இல்லாமல் அவர் பரலோகத்திற்கு திரும்பிச் செல்வதைவிட, தன் சொந்த பிதாவினால் கைவிடப்பட்டு பாடுபடுவதையே நமக்காக தெரிந்துகொண்டார்! மனுக்குலத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதற்குப் பதிலாய் "அவர் தன்னையே குற்றநிவாரண பலியாக (ஏசாயா 53:10) ஒப்புக்கொடுத்தார்.


இப்போது இயேசு "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்" (யோவான் 14:12) என்றே அறைகூவல் விடுத்தார். இயேசுவைப் போலவே, நாமும் அற்புதங்கள் செய்திட முடியும் என்பதை குறிப்பிட்டு, அவர் கூறியதாக நாம் எண்ணிட முடியும். ஆனால் "கிரியைகளை" வெறும் அற்புதங்களாக மட்டுப்படுத்தி இயேசு இந்த வசனத்தைக் கூறவில்லை! அவர் குறிப்பிட்ட கிரியைகளெல்லாம், மன்னிக்கும் மனப்பான்மையும், பிறரை இரட்சிப்பதும், பாவிகளில் ஒருவராக எண்ணப்படுவதும், தன்னையே குற்ற நிவாரண பலியாக ஒப்புக் கொடுப்பதுமாகிய கிரியைகளையே இன்று நாமும் செய்திட முடியும்!


சிலுவையின் பாதையே, பிறரை இரட்சித்திடும் பாதை! நம் இரட்சகரைப் போலவே, நாமும் அநேகரை மீட்டு, நம் திவ்விய அன்பினால் அவர்களை கிறிஸ்துவண்டை சேர்த்திட, சிலுவைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கக்கடவோம்!


ஜெபம்:

எங்கள் அன்பின் பிதாவே! சிலுவையை தவிர்த்துவிட்டு வாழ எண்ணும் எங்கள் சுயநலத்தை மன்னியும்! உமது கிரியைகள் எங்களில் வெளிப்பட சிலுவைக்கு எங்களை ஒப்புக்கொடுக்கிறோம்! 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments