Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 02

 "இன்று அவருடைய சத்தம்"


நவம்பர் 2


🔸️ தேவன் விரும்பும் தாழ்மையின் ஜீவியம்! 🔸️


"தாழ்மைக்குத்தான்" தேவன் எவ்வளவாய் மதிப்பு வைத்திருக்கிறார்! இதை 1பேதுரு 3:4 கூறும்போது "சாந்தமும் அமைதலும் உள்ள ஆவி ஒரு ஸ்திரீயினிடத்திலோ அல்லது ஒரு புருஷனிடத்திலோ காணப்பட்டால், அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது" என சங்கநாதமாய் ஒலிக்கிறதே!! தாழ்மையும், சாந்த இருதயமும் கொண்டவராகவே இயேசு இருந்தார். அது மாத்திரமல்லாமல், தன்னிடமுள்ள இந்த திவ்விய சுபாவத்தை சகோதர சகோதரிகளாகிய நாம் அவரிடம் வந்து கற்றுக்கொள்ளும்படியும் அழைத்தார்! (மத்.11:28).


சாந்தமும் அமைதலும் உள்ள ஆவியின் அர்த்தம் என்ன? ஆம், ஒருபோதும் எதிர்ப்பில்லாததும் அல்லது ஒருபோதும் அமைதி இழக்காததுமான தன்மையே சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகும். சில 'வாஷிங் மெஷினில்' இந்த 'எதிர்த்துப் போராடும் கருவி' பொருத்தப்பட்டுள்ளது. அது தொடர்ச்சியாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பி சுழன்று கொண்டே இருக்கும். இவ்வாறு சற்றேனும் அமைதியாய் இராமல் அந்தக் கருவி எப்பொழுதும் எதிர்த்து சுழன்று கொண்டே இருக்கும். ஆம், யாராகிலும் சிலர் அவர்களுக்குத் தவறு செய்து உரசல் ஏற்படுத்திவிட்டால், "இவர்களின் எதிர்ப்புக் கருவி" இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் எதிர்த்து சுழல ஆரம்பித்துவிடும்!! 


ஆனால் தங்கள் ஆவியில் தாழ்மையையும், சாந்தத்தையும் பெற்றவர்கள், இந்த "எதிர்ப்புக் கருவியை" சிலுவையில் அறைந்து, அதன் பிடியிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றிருப்பார்கள். எனவே, மற்றவர்கள் எதைச் செய்தாலும் அல்லது செய்யாமல் போனாலும், அதனிமித்தம் இவர்கள் ஒருபோதும் பாதிக்கப்படவோ அல்லது மனம் புண்படவோமாட்டார்கள்!


இதைக்குறித்து 1பேதுரு 3-ம் அதிகாரம் தொடர்ந்து கூறும்போது, "சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியின் அலங்காரம்" அழியாத அலங்கரிப்பாய் இருக்கிறது! என வியப்புடன் எடுத்துரைக்கிறது. இவ்வுலகத்திலுள்ள பெண்கள் "தலை நரைத்துப் போனாலும்கூட" தங்களை இளமையும் அழகும் உடையவர்களாய் காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் "அழியாத அலங்கரிப்பின்" மெய் இரகசியத்தை இன்று கேளுங்கள். . . ஆம், சாந்தமும் அமைதலும் உள்ள ஆவியே என்றென்றும் அழியாத அலங்கரிப்பாய் இருக்கிறது!! இந்த உண்மையை எத்தனை ஸ்திரீகள் (அல்லது புருஷர்கள்) கண்டிருக்கிறார்கள்?   


ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! உள்ளத்தில் அமைதியையும், சாந்தத்தையும் இழப்பது, தாழ்மையை விட்டுவிடுவதாய் இருக்கிறதே! இந்த கொந்தளிக்கும் சிந்தையை சிலுவையில் அறைந்து தாழ்மையாய் வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments