Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 11

 "இன்று அவருடைய சத்தம்"


நவம்பர் 11


🔸️ வேதம் சுட்டிக்காட்டும் பக்தியுள்ள பெண்கள்! 🔸️


இரண்டு ரகமான பெண்களைக் குறித்து உன்னதப்பாட்டு 8:9-ம் வசனம் விவரிக்கிறது. முதல் ரகத்தைச் சார்ந்தவள் மதிலைபோலவும், இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவள் கதவைப் போலவும் இருக்கிறாள் எனக் கூறுகிறது. 


கதவைப்போல் இருக்கும் பெண், உங்கள் முன் நிற்பதற்கு முந்திக் கொள்பவளும், தன் இதயக்கதவை விரிவாய்த் திறந்து உணர்ச்சிகளைக் கொட்டுபவளுமாய் இருக்கிறாள்! மதிலைப் போன்று அல்லது சுவரைப்போன்று இருக்கும் பெண், கண்ணியமாய் நடந்துகொண்டு தன்னை மறைத்துக் கொள்ளவே எப்போதும் நாடுவாள்!


எல்லாப் பெண்களும் இந்த மதிற்சுவருக்கு ஒப்பான பெண்களாய் இருக்கும்படியே ஸ்திரீகளை தேவன் சிருஷ்டித்தார். இதற்கு மாறாக, ஒரு பெண் "திறந்த கதவைப்போல்" இருப்பாளென்றால், இந்த வசனம் அறிவுறுத்துகிறபடி, அவளுடைய பெற்றோர்கள் 'அநேகம் பலகைகளை' அவளுக்கு மதிலாக வைத்திட வேண்டும்! அதாவது, அவளுடைய பெற்றோர்கள் பல்வேறு வழிகளில் அவளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!! 


ஆனால், அவளாகவே ஒரு மதில் சுவராக இருந்துவிட்டால், ஓர் அரண்மனை போன்ற பக்தியுள்ள வீட்டை அவள் ஜீவியத்தின் மூலமாய் கட்டிவிட முடியும்,  

என எத்தனை நேர்த்தியாய் வேதம் எடுத்துரைக்கிறது!


மேலும், 1 பேதுரு 3:3,4 வசனங்கள் அறிவுறுத்துகிறபடி, ஓர் இயேசுவின் சீஷியாய் வாழ விரும்பும் எல்லாப் பெண்களும் விலை உயர்ந்த வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் தவிர்த்திட வேண்டும்! ஏனெனில், ஒரு ஸ்திரீயிடம் தேவன் எதிர்பார்க்கும் விலையேறப்பெற்ற அணிகலன் "சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியே!" ஆகும்.  


ஒரு ஸ்திரீ உடுத்தும் உடைகளைப் பிரதானமாய் கொண்டு சீஷத்துவம் கணக்கிடப்படுவதில்லை என்பது உண்மைதான். இருப்பினும், ஒரு ஸ்திரீயின் குணாதிசியங்களை, அவள் உடுத்தும் உடைகள் வெளியரங்கப்படுத்துவதும் உண்மையாகவே இருக்கிறது!! 


மேலும், இயேசுவின் சீஷியாய் இருப்பவள் தூய்மை இல்லாத 'அழுக்கான உடையை' உடுத்த மாட்டாள்! அதேசமயம், பளிச்சென தோன்றும் விலையுயர்ந்த உடைகளுக்காகவோ அல்லது அலங்கரிப்புகளுக்காகவோ தன் பணத்தை வீணாக்கிடவும் மாட்டாள்!! 


ஜெபம்:

எங்கள் பரம தந்தையே! உமது பார்வையில் விலையேறப் பெற்றவர்களாய் வாழ வேண்டும் என விரும்பி, விலையுயர்ந்த வஸ்திரம், அணிகலன்கள் போன்ற உலக கவர்ச்சிகளை வெறுத்திட எங்களுக்கு உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments